News January 23, 2025
மனைவியை துண்டு துண்டாக்கி, குக்கரில் சமைத்து… கொடூரம்

ஐதராபாத்தில், மனைவி மீது சந்தேகப்பட்ட கணவன், அவரை துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. மேலும், மனைவியின் உடல் பாகங்களை குக்கரில் போட்டு சமைத்து, பின் ஏரியில் புதைத்துள்ளார். இவ்வளவையும் செய்துவிட்டு, மனைவியின் குடும்பத்தினருடன் போலீஸ் ஸ்டேஷன் சென்று கடந்த 18-ம் தேதி முதல் மனைவியை காணவில்லை என்று நல்லப் பிள்ளை போல புகாரும் அளித்துள்ளார்.
Similar News
News November 28, 2025
சர்வதேச சந்தையில் தங்கம் விலை மீண்டும் குறைந்தது

சர்வதேச சந்தையில் ஒரு வாரத்திற்கு பிறகு தங்கம் விலை மீண்டும் சரிவைக் கண்டுள்ளது. 1 அவுன்ஸ்(28g) தங்கம் $10.21 குறைந்து $4,157-க்கு விற்பனையாகிறது. அதேநேரம் வெள்ளி விலை 1 அவுன்ஸ் $0.46 டாலர் உயர்ந்து $53.59 ஆக உள்ளது. இந்திய சந்தையில் நேற்று, தங்கம் சவரனுக்கு ₹240 குறைந்து ₹94,160-க்கு விற்பனையானது. சர்வதேச சந்தையில் விலை குறைவால் இன்று மேலும் விலை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
News November 28, 2025
விஜய் தனித்துவமாக இயங்க வேண்டும்: திருமாவளவன்

பாஜகவுடன் விஜய் இணக்கமாக செல்வது, அவரது எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்று திருமாவளவன் கூறியுள்ளார். விஜய் தனித்துவமாக இயங்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து விலகியதற்கு பின்னால் BJP, RSS உள்ளதோ என்ற சந்தேகம் தனக்கு இருப்பதாகவும், அதிமுகவை பலவீனப்படுத்தும் செயலில் பாஜக இறங்கியிருப்பதாகவும் திருமா கூறியிருந்தார்.
News November 28, 2025
தேர்வு இல்லாமல் மத்திய அரசில் 156 வேலைவாய்ப்பு!

பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்தில் ஃபிட்டர், உள்ளிட்ட 156 அப்ரன்டீஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: ITI. மார்க் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவோருக்கு உதவித்தொகை வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள்: டிச.8. இங்கே <


