News April 4, 2025
சீரியல் நடிகர் ஐயப்பன் உன்னி மீது மனைவி பரபரப்பு புகார்!

பிரபல சீரியல் நடிகர் ஐயப்பன், கடந்த 3 மாதங்களாக வீட்டுக்கு வருவதில்லை என அவரது மனைவி பிந்தியா போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும், கடந்த 3 வருடமாக தன்னையும் குழந்தையையும் அவர் சரியாக கவனிப்பதில்லை என்றும், குடும்ப செலவுக்கு பணம் தராமல் அடித்துத் துன்புறுத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். ஐயப்பன் கனா காணும் காலங்கள், தென்றல், கயல் போன்ற சீரியலில் நடித்து பிரபலமடைந்தார்.
Similar News
News August 29, 2025
நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அலுவலர்கள் இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில் இன்று ( ஆகஸ்ட். 28 ) நாமக்கல் – கோமதி (9498167680 ), ராசிபுரம் – அம்பிகா ( 9498106528), திருச்செங்கோடு – சங்கீதா ( 9498167212), வேலூர் – இந்திராணி ( 9498169033) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
News August 29, 2025
TR பாலு சொத்து மதிப்பு ₹10,000 கோடியா?

திமுக MP TR பாலுவுக்கு ₹10,000 கோடி சொத்துக்கள் இருப்பதாக அண்ணாமலை கூறிய விவகாரம் மீண்டும் அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது. இந்த வழக்கில் இன்று, கோர்ட்டில் ஆஜரான TR பாலு, <<17545001>>செய்தியாளரை ஒருமையில்<<>> பேசிய விவகாரம் மேலும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இதனிடையே, TR பாலுவின் சொத்து மதிப்பு எவ்வளவு என பலரும் தேடத் தொடங்கியுள்ளனர். 2024 LS தேர்தல் <
News August 29, 2025
ALERT: 19 மாவட்டங்களில் மழை வெளுக்கும்

நீலகிரி, திருப்பூர், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நள்ளிரவு 1 மணி வரை சென்னை, செங்கை, காஞ்சி, கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கள்ளக்குறிச்சி, தி.மலை, வேலூர், ராணிப்பேட்டை, தஞ்சாவூர் ஆகிய 19 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. உங்க ஊரில் இப்போ மழை பெய்யுதா?