News March 23, 2025
தமிழகத்தில் இன்று பரவலாக மழைக்கு வாய்ப்பு

வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று (மார்ச் 23) மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தூத்துக்குடி, நெல்லை, குமரி, திருவண்ணாமலை, விருதுநகர், தென்காசி, நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், தருமபுரி ஆகிய மாவட்டங்களின் பல இடங்களில் நேற்று முதலே மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. உங்கள் ஊரில் மழை பெய்கிறதா?
Similar News
News March 24, 2025
புற்றுநோய் ஆபத்தை ஏற்படுத்தும் உணவுகள்!

புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தும் உணவுகளை தெரிஞ்சிக்கோங்க.*உப்பிட்டு தயாரிக்கப்படும் கருவாட்டில் உள்ள நைட்ரோசாமைகளால் மூக்கில் புற்றுநோய் ஏற்படும். *சிவப்பு இறைச்சி அதிகம் உட்கொள்வதால் குடல் புற்றுநோய் உருவாகும். *கார்பனேற்றம் செய்யப்பட்ட குளிர்பானங்களில் உள்ள சர்க்கரையால் கணைய புற்றுநோய் வரும். *மைக்ரோவேவ் செய்யப்பட்ட பாப்கார்னில் உள்ள Perfluorooctanoic acid அமிலத்தால் புற்றுநோய் வரும். உஷார்..
News March 24, 2025
கிரிக்கெட் வீரர் தமிம் இக்பாலுக்கு நெஞ்சு வலி

பிரபல வங்கதேச கிரிக்கெட் வீரர் தமிம் இக்பால் நெஞ்சு வலி காரணமாக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டாக்காவில் கிரிக்கெட் லீக் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தபோது நெஞ்சு வலி காரணமாகச் சுருண்டு விழுந்த அவரை அழைத்துச் செல்ல ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், வலி அதிகமானதால் அருகில் உள்ள ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்குத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
News March 24, 2025
அலப்பற கிளப்புறோம்!! தோனிக்காக எழுதிய பாடல்

ஜெய்லர் படத்தில் இடம்பெற்ற அலப்பற கிளப்புறோம் பாடல் ரஜினிக்கு அப்படியே பொருந்திப்போகும். ஆனால் அது ரஜினிக்கு மட்டும் எழுதிய பாடல் இல்லையாம், தல தோனிக்கும் சேர்த்துதான் எழுதப்பட்டதாம். அனிருத் அளித்த பேட்டியில் அலப்பற கிளப்புறோம் பாடல் ரஜினிக்கு மட்டுமல்லாமல், தோனி ஸ்டேடியத்தில் நுழையும் போது போடக்கூடிய ஒன்றாக இருக்க வேண்டும் என எழுதப்பட்டதாகவும் கூறினார்.