News June 20, 2024

சென்னையில் பரவலாக மழை

image

சென்னையில் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. கடந்த சில தினங்களாக பகல் பொழுதில் வெயில் வாட்டி எடுத்தாலும், இரவில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்தவகையில் தற்போது கோயம்பேடு, டி.நகர், கிண்டி, சைதாப்பேட்டை, நந்தனம், பூந்தமல்லி, போரூர், வளசரவாக்கம், அசோக் நகர், வடபழனி, கே.கே.நகர், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

Similar News

News November 15, 2025

சுந்தர்.சி விலகியது பற்றி கமல் விளக்கம்

image

ரஜினி படத்தில் இருந்து சுந்தர்.சி பின்வாங்கியது குறித்து கமல் விளக்கமளித்துள்ளார். படத்தில் மீண்டும் இணைய வாய்ப்புள்ளதா என்பது சுந்தர் சி-க்கு தான் தெரியும் என கூறிய அவர், ஒரு முதலீட்டாளராக எனது நட்சத்திரத்திற்கு பிடித்த கதையை படமாக எடுப்பதே எனக்கு ஆரோக்கியம் என கூறியுள்ளார். மேலும், ரஜினிக்கு பிடித்தவர்களிடம் கதை கேட்டு கொண்டிருப்பதாகவும், புதியவர்களுக்கு வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

News November 15, 2025

தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வறை: CM ஸ்டாலின்

image

தூய்மை பணியாளர்களுக்காக சென்னையில் 200 வார்டுகளிலும் உடைமாற்றும் அறை, கழிப்பறை வசதியோடு, ஓய்வறை கட்டித் தரப்படும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். தூய்மை பணியாளர்களுக்கு பல கோரிக்கைகள் இருப்பது தனக்கு தெரியும் என கூறிய அவர், அவை படிப்படியாக நிறைவேற்றித் தரப்படும் எனவும் உறுதியளித்துள்ளார். மேலும், டிச.6 முதல் இலவச உணவு வழங்கும் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

News November 15, 2025

தேர்தலில் போட்டியிடுவதை நிதிஷ் ஏன் தவிர்க்கிறார்?

image

9-வது முறையாக பிஹார் CM-மாக உள்ள நிதிஷ்குமார், கடைசியாக 1985-ல் MLA-வாக தேர்வானார். 2000-ல் எந்த அவையிலும் உறுப்பினராக இல்லாத நிலையில், CM ஆன 8 நாளில் ராஜினாமா செய்தார். 2005-ல் பிஹார் <<18293809>>மேலவைக்கு<<>> தேர்வான அவர், இன்றுவரை MLC-யாகவே தொடர்கிறார். ஒரு தொகுதியில் மட்டும் தன்னை சுருக்கிக் கொள்ள விரும்பவில்லை என்றும், மேலவையை தான் மிகவும் மதிப்பதாகவும், இது தன் தனிப்பட்ட சாய்ஸ் என்றும் நிதிஷ் கூறுகிறார்.

error: Content is protected !!