News August 10, 2024
3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 145 ரன்கள் எடுத்த WI

SA-க்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின், 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் WI அணி 4 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 145 ரன்கள் எடுத்துள்ளது. முதல் இன்னிங்சில் SA அணி 357 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அடுத்து களமிறங்கிய WI அணியின் கிரேக் & லூயிஸ் தலா 35 ரன்கள் எடுத்து அவுட் ஆகினர். இதையடுத்து களம் இறங்கிய ஹோல்டர் (13), ஹாட்ஜ் (11) களத்தில் உள்ளனர். இதன் மூலம் WI இன்னும் 212 ரன்கள் பின்னிலையில் உள்ளது.
Similar News
News December 13, 2025
₹1,000 மகளிர் உரிமை தொகை.. வந்தது மகிழ்ச்சி செய்தி

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்ட 11 லட்சம் பேருக்கு அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துள்ளார். மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பளிப்பது குறித்து CM ஸ்டாலின் முடிவெடுப்பார் என அவர் உறுதியளித்துள்ளார். மேலும், நிராகரிக்கப்பட்டவர்கள் RDO-க்களிடம் மேல்முறையீடு செய்வது குறித்து அதிகாரிகள் விளக்கம் அளிப்பர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News December 13, 2025
தனுஷுக்கு பிறகு ஸ்ரேயஸ்? மனம் திறந்த மிருணாள்

தனுஷுடன் கிசுகிசுக்கப்பட்ட மிருணாள் தாகூர், சமீபகாலமாக கிரிக்கெட் வீரர் ஸ்ரேயஸுடன் டேட்டிங் செய்து வருவதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இதுகுறித்து பேசிய அவர், ஆரம்பத்தில் இதுபோன்ற விமர்சனங்கள் தனக்கு கடினமாக இருந்தது, ஆனால் தற்போது ‘இவ்வளவு தானே’ என்ற மனநிலைக்கு வந்துவிட்டதாக கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். எந்த விமர்சனமும் என்னை பாதிக்காது என்றும் மிருணாள் கூறியுள்ளார்.
News December 13, 2025
கல்வி உதவித் தொகை.. டிச.15-ம் தேதியே கடைசி!

திறன் படிப்பு உதவித் தொகை திட்ட தேர்வுக்கு விண்ணப்பிக்கும் 8-ம் வகுப்பு மாணவர்கள் டிச.15-க்குள் (திங்கள்கிழமை) <


