News May 5, 2024
வெள்ளை நிற டி-சர்ட் மட்டும் அணிவது ஏன்? ராகுல் பதில்

வெள்ளை நிற டி-சர்ட் மட்டும் அணிவது ஏன் என்ற கேள்விக்கு ராகுல் காந்தி பதிலளித்துள்ளார். இந்திய யாத்திரை தொடங்கியது முதல் ராகுல் காந்தி தொடர்ந்து வெள்ளை நிற டி-சர்ட் அணிவதையே வழக்கமாக வைத்துள்ளார். இதுகுறித்த கேள்விக்கு, மிகவும் எளிமையாகவும், வெளிப்படையானதாகவும் வெள்ளை நிறம் உள்ளதால், அந்த நிற டி-சர்ட்டை அணிவதாகவும், எளிமையாக இருப்பதை தாம் விரும்புவதாகவும் ராகுல் பதிலளித்தார்.
Similar News
News August 21, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ஆகஸ்ட் 21 – ஆவணி 5 ▶ கிழமை: வியாழன் ▶ நல்ல நேரம்: 12:00 AM – 1:00 AM ▶ கெளரி நல்ல நேரம்: 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶ எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶ குளிகை: 9:00 AM – 10:30 AM ▶ திதி: திதித்துவம் ▶ சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶பிறை: தேய்பிறை.
News August 21, 2025
கர்நாடகாவை போல் TN அரசு செயல்படவில்லை: அன்புமணி

சமூகநீதியை CM ஸ்டாலின் குழித்தோண்டி புதைப்பதாக அன்புமணி விமர்சித்துள்ளார். கர்நாடகத்தில் பட்டியலின மக்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்ட நாளிலிருந்து 183 நாள்களில் சாத்தியமானதாக குறிப்பிட்டுள்ளார். கர்நாடகா அரசு காட்டிய வேகத்தை வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் TN அரசும், பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் காட்டவில்லை என அன்புமணி குற்றம்சுமத்தியுள்ளார்.
News August 21, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஆகஸ்ட் 21) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.