News October 10, 2025
டிரம்ப்புக்கு நோபல் பரிசு கொடுக்காதது ஏன்?

டிரம்ப்புக்கு, சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படாததற்கு பின்வரும் காரணங்கள் சொல்லப்படுகின்றன: *நோபல் பரிசுக்கு பெயர்களை முன்மொழிவது ஜனவரியிலேயே முடிந்துவிடுமாம். ஆனால், டிரம்ப் அப்போதுதான் பதவியேற்றார். *2024 அல்லது அதற்கு முன்பு மேற்கொண்ட சமாதான பணிகளுக்கே இந்த ஆண்டு நோபலுக்கு பரிசீலிக்கப்படும். ஆனால், டிரம்ப் சொல்லும் போர்நிறுத்தங்கள் எல்லாமே 2025-ல் நடந்தவையே. அடுத்த ஆண்டு கிடைக்குமா?
Similar News
News October 11, 2025
இன்றைய நல்ல நேரம்

▶அக்டோபர் 11, புரட்டாசி 25 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4.45 PM – 5.45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: பஞ்சமி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: தேய்பிறை
News October 11, 2025
மீண்டும் முற்றிய ராமதாஸ் – அன்புமணி மோதல்

பாமக மாநில இளைஞரணி தலைவராக முன்னாள் MLA கணேஷ்குமாரை அன்புமணி நியமித்துள்ளார். கடந்த வாரம் தான், இதே பதவியை GK மணியின் மகன் GKM தமிழ்க்குமரனுக்கு ராமதாஸ் வழங்கியிருந்தார். அப்பா – மகன் சண்டை முற்றுபெறாத நிலையில், பொறுப்பாளர்கள் நியமனம், நீக்கத்திலும் இருவரும் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, தனது தந்தைக்கு ஏதாவது ஒன்று என்றால், சும்மா விடமாட்டேன் என <<17968396>>அன்புமணி<<>> கொதித்துள்ளார்.
News October 11, 2025
டிரம்ப்புக்கு மனிதாபிமான இதயம் உள்ளது: USA

நோபல் குழு அமைதியை விட அரசியலை முன்னிறுத்துகிறது என வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஸ்டீவன் சியுங் விமர்சித்துள்ளார். டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படாத நிலையில், மலைகளை கூட தகர்த்தக்கூடிய சக்தி டிரம்ப்புக்கு உண்டு என்று சியுங் குறிப்பிட்டுள்ளார். டிரம்ப்புக்கு மனிதாபிமான இதயம் உள்ளது என்ற அவர், தொடர்ந்து அமைதி ஒப்பந்தங்களை மேற்கொள்வார் என்றும் கூறியுள்ளார்.