News February 28, 2025
சம்மனை கதவில் ஒட்டியது ஏன்? சீமான் கேள்வி

சம்மனை கதவில் போலீசார் ஒட்டியது ஏன் என்று சீமான் கேள்வியெழுப்பியுள்ளார். சேலத்தில் இருந்து சென்னை வந்த அவர், விமான நிலையத்தில் பேட்டியளித்தார். அப்போது, சம்மன் அளிக்க வந்த போலீசார், தாம் வீட்டில் இல்லையென்றால், தனது மனைவியிடம் அதை அளித்து சென்று இருக்கலாம் என்று கூறினார். தனது மனைவியிடம் சம்மனை அளிக்காமல் கதவில் ஒட்டி அவமானப்படுத்தி உள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.
Similar News
News March 17, 2026
வரலாற்றில் இன்று

➤1919 – ரெளலட் சட்டத்தை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வதற்காக மகாத்மா காந்தி சென்னை வந்தார். ➤ 1950 – கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ‘கலிபோர்னியம்’ என்ற 98-வது தனிமத்தை கண்டுபிடித்ததாக அறிவித்தனர். ➤1963 – பாலித் தீவில் ஆகூங்கு எரிமலை வெடித்ததில் 1,100 பேர் உயிரிழந்தனர். ➤1925 – நடிகர் மேஜர் சுந்தரராஜன் பிறந்தநாள். ➤1990 – பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் பிறந்தநாள்.
News March 17, 2026
புதுச்சேரியில் பாமக தனித்து போட்டி

புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட உள்ளதாக பாமக முடிவு செய்துள்ளது. புதுச்சேரி பாமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. NDA கூட்டணியில் தங்களுக்கு போதிய மரியாதை அளிக்கப்படவில்லை என அக்கட்சி நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர். கடந்த 2021 தேர்தலில் பாமக போட்டியிடவில்லை என்றாலும் NDA கூட்டணிக்கு ஆதரவு அளித்தது குறிப்பிடத்தக்கது.
News March 17, 2026
ஆப்கான் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே சமீபத்தில் மோதல் போக்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில், தலைநகர் காபுலில் உள்ள ஹாஸ்பிடல் மீது பாக் வான்வழி தாக்குதல் நடத்தியதாக ஆப்கான் குற்றம்சாட்டியுள்ளது. இதில் அங்கு சிகிச்சை பெற்றுவந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஹாஸ்பிடல் மீது தாக்குதலை நடத்தவில்லை என பாக் மறுப்பு தெரிவித்துள்ளது.


