News August 15, 2024
ராகுலுக்கு பின் வரிசையில் சீட் கொடுத்தது ஏன்?

டெல்லியில் நடந்த சுதந்திர தின நிகழ்ச்சியில் ராகுல் காந்திக்கு பின் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. சுதந்திர தின நிகழ்ச்சிகளை பாதுகாப்புத் துறை அமைச்சகமே ஒருங்கிணைத்து வருகிறது. இந்நிலையில், இந்த சர்ச்சை குறித்து விளக்கம் அளித்த பாதுகாப்புத் துறை, ஒலிம்பிக் வீரர்களுக்கு முன்வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டதால், ராகுலுக்கு இடமளிக்க முடியவில்லை எனக் கூறியுள்ளது.
Similar News
News August 15, 2025
புதுச்சேரி: யார் இந்த பிரெஞ்சு காந்தி?

புதுச்சேரி சுதந்திரப் போராட்ட வீரர்களின் பட்டியலில் ஒரு சிறந்த ஆளுமை, 1884 ஆம் ஆண்டு காரைக்காலுக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் பிறந்தவரான எஸ்.அரங்கசாமி நாயக்கர் ஆவார். இவர், வேதாரண்யத்தில் நடைபெற்ற உப்பு சத்தியாகிரகத்தில் அவரின் பங்களிப்பு மிக முக்கியமானது. காந்தியின் கொள்கைகளை அவர் தனது வாழ்நாள் முழுவதும் பின்பற்றியதால், அவர் பிரெஞ்சு காந்தி என்று அழைக்கப்பட்டார். இத்தகவை அனைவருக்கு SHARE செய்ங்க
News August 15, 2025
மக்களாட்சி நிலைக்க உறுதியேற்போம்: EPS

நாட்டின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு EPS தனது வாழ்த்துகளை தமிழக மக்களுக்கு தெரிவித்துள்ளார். நாடு விடுதலை பெற போராடி தன் இன்னுயிர் நீத்த தியாகச் செம்மல்களை, போற்றி வணங்கி நினைவுகூர்வதாக EPS தெரிவித்துள்ளார். மேலும், குடும்ப ஆட்சி எனும் மன்னராட்சி அகற்றப்பட்டு, முன்னோர்கள் போராடி பெற்ற மக்களாட்சி நிலைத்திட, நல்லாட்சி அமைத்திட உறுதியேற்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
News August 15, 2025
கூலி பட முதல் நாள் வசூல் சாதனை.. இவ்வளவு கோடியா?

நேற்று வெளியான ‘கூலி’ திரைப்படம் முதல் நாளில் சுமார் ₹140 கோடி வரை வசூலித்திருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. தமிழ்நாட்டில் ₹30 கோடியும், இந்தியாவின் மற்ற மாநிலங்களில் ₹65 கோடியும், வெளிநாடுகளில் ₹75 கோடி வரை வசூலித்திருக்கிறதாம். அடுத்த மூன்று நாள்கள் விடுமுறை என்பதால், வசூல் மேலும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. நீங்க படம் பாத்தாச்சா.. எப்படி இருக்கு?