News December 16, 2024
இளையராஜா வெளியே நிற்க வைக்கப்பட்டது ஏன்?

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலின் அர்த்த மண்டபத்தில் இருந்து இசைஞானி இளையராஜா வெளியேற்றப்பட்ட விவகாரம் பற்றி எரிந்த சூழலில் கோயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அர்த்தம் மண்டபத்தையும் கருவறை போன்றே பாவிப்பதாகவும், அதனுள் ஜீயர்கள் தவிர யாருக்கும் அனுமதி இல்லையென்றும் கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இதனை, இளையராஜா ஏற்றுக் கொண்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
Similar News
News August 30, 2025
RECIPE: வயசுப் பெண்களுக்கு முக்கியமான உளுந்தங்களி!

◆உளுந்தங்களியில் கார்போஹைட்ரேட், பொட்டாசியம், வைட்டமின் நிறைந்திருப்பதால், பெண்களுக்கு மிகவும் நல்லது என டாக்டர்கள் கூறுகின்றனர்.
➥தண்ணீரில் அரிசிமாவு, வறுத்த பாசிப்பருப்பு மாவை கலந்து மிக்சியில் அரைத்து கொள்ளவும்.
➥அதை நன்கு கொதிக்க வைத்து, கருப்பட்டி or வெல்லம், உளுந்து மாவு சேர்த்து நன்றாக கிளறவும்.
➥அதில், ஏலக்காய், தேங்காய் துருவல் ஆகியவற்றை சேர்த்தால் சுவையான உளுந்தங்களி ரெடி. SHARE IT.
News August 30, 2025
சற்றுமுன்: இன்று ஒரே நாளில் ₹3000 உயர்வு … புதிய உச்சம்

ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளி விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்று ஒரே நாளில் வெள்ளி விலை கிராமுக்கு ₹3 உயர்ந்து ₹134-க்கும், கிலோ வெள்ளி ₹3000 உயர்ந்து ₹1,34,000-க்கும் விற்பனையாகிறது. அதேபோல், கடந்த 20-ம் தேதி ₹73,440-க்கு விற்பனையான ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை சுமார் ₹3520 (2 நாளில் மட்டும் ₹1720) அதிகரித்து இன்று ₹76,960-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
News August 30, 2025
ஓய்வுபெறும் நாளில் சஸ்பெண்ட் கிடையாது: அரசு

குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் அரசு ஊழியர்களை ஓய்வுபெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யும் நடைமுறை இதுவரை பின்பற்றப்பட்டு வந்தது. இந்நிலையில், ஓய்வுபெறும் நாளில் சஸ்பெண்ட் நடவடிக்கை கிடையாது என விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் உரிய தேதியில் ஓய்வுபெற அனுமதிக்கப்படுவர். அதேநேரம், விசாரணை முடிவுற்ற பிறகே பணப் பலன்களை பெற முடியும் என்றும் கூறியுள்ளது.