News October 8, 2025

தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டது ஏன்?

image

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக <<17946346>>தஷ்வந்துக்கு<<>> எதிராக முறையான ஆதாரம் இல்லை என SC தெரிவித்துள்ளது. குற்றம் நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட DNA மாதிரிகளும் குற்றச்சம்பவத்துடன் ஒத்துப்போகவில்லை. ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்ட CCTV காட்சிகளில் இருப்பது தஷ்வந்த் தான் என்பது முறையாக உறுதிபடுத்தவில்லை. சந்தேகத்திற்கு இடமில்லாமல் தஷ்வந்த் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்றும் கோர்ட் கூறியுள்ளது.

Similar News

News October 8, 2025

விஜய்க்காக மதுரை தவெகவினர் ஒட்டிய போஸ்டர்

image

கரூர் சம்பவத்தில் விஜய்க்கு எதிராக சூழ்ச்சி நடப்பதாக தவெகவினர் கூறிவருகின்றனர். இதனாலேயே மனதளவில் சோர்ந்துள்ள விஜய் இன்னும் களத்துக்கு வரவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், விஜய்க்கு தெம்பூட்டும் வகையில் மதுரையில் தவெகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில், கரூர் விவகாரத்தில் உண்மை வெளிவரும் என சொல்லும் வகையில் MGR-ன் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளதால் மீண்டும் சர்ச்சையாகியுள்ளது.

News October 8, 2025

உள்நாட்டு தயாரிப்பான Zoho-க்கு மாறிவிட்டேன்: அமித்ஷா

image

உள்நாட்டு தயாரிப்பான Zoho Mail-க்கு மாறியுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். amitshah.bjp@zohomail.in. தான் தன்னுடைய புதிய இ-மெயில் முகவரி எனவும், எதிர்கால மெயில் பரிமாற்றங்களுக்கு இந்த முகவரியையே பயன்படுத்துமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். உள்நாட்டு தயாரிப்புகளுக்கு முன்னுரிமை கொடுக்க PM மோடி கேட்டுக் கொண்ட நிலையில், பலரும் மாறி வருவது குறிப்பிடத்தக்கது.

News October 8, 2025

மறந்தும் இந்த 3 பொருள்களை தானம் கொடுத்துராதீங்க!

image

தானம் கொடுப்பது மிகவும் நல்லது. ஆனால், இந்த 3 பொருள்களை தானமாக கொடுக்க கூடாது என ஜோதிடத்தில் கூறப்படுகிறது ➤கத்தி, கடப்பாரை போன்ற கூர்மையான பொருள்களை தானமாக கொடுத்தால், கெட்ட பலன்கள் வீடுதேடி வருமாம் ➤பழைய உணவுகளை பிறருக்கு தானமாக கொடுப்பது, வரவுக்கு மீறி செலவுகளை உண்டாகுமாம் ➤துடைப்பத்தை தானமாக கொடுப்பது வீட்டில் பணப் பிரச்னையை உண்டாக்குமாம். கவனமா இருங்க. அனைவருக்கும் இத்தகவலை பகிருங்கள்.

error: Content is protected !!