News March 28, 2024

அண்ணாமலையின் வேட்புமனு ஏற்பு ஏன்?

image

பாஜக தலைவர் அண்ணாமலை வேட்புமனுவை தவறாக தாக்கல் செய்திருப்பதாகவும் அதனை நிராகரிக்க வேண்டும் என்றும் அதிமுக முறையிட்டிருந்தது. ஆனால், வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் நிலையில் அதுகுறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்திருக்கிறது. அண்ணாமலை 2 வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்ததாகவும், அதில் ஒன்று சரியாக இருந்ததால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Similar News

News March 13, 2026

டிரம்ப்பை மோசமாக விமர்சித்த கலிபோர்னியா கவர்னர்

image

ஈரான் போரால் எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ள நிலையில், ரஷ்யாவிடம் எண்ணை வாங்க சில நாடுகளுக்கு அனுமதி அளிக்கிறோம் என்று டிரம்ப் கூறியிருந்தார். ரஷ்யாவிடம் இந்தியா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகள் எண்ணெய் வாங்குவதால் ரஷ்யா பெருமளவில் லாபம் ஈட்டும். இதனை கலிபோர்னியா கவர்னர், ‘டிரம்ப் அனுமதி வழங்கவில்லை; மாறாக அவர்தான் புடின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்’ என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

News March 13, 2026

அதிமுகவை MGR தொடங்கவில்லையா..!

image

1972-ல் புதிதாக கட்சி தொடங்க நினைத்த MGR, அனகாபுத்தூர் ராமலிங்கம் என்பவர் பதிவு செய்திருந்த அதிமுகவில் தம்மை இணைத்துக் கொண்டார். சாதாரண ஒரு தொண்டனாகவே தன்னை இக்கட்சியில் இணைத்துக் கொண்டதாக அவர் தெரிவித்தார். அதிமுக என்ற பெயரில் செயல்பட்டு வந்ததை, 1976-ல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று மாற்றினார். தற்போது MGR-ஐ பின்பற்றி தொண்டர் ஒருவரின் கட்சியில் <<19370263>>சசிகலா<<>> இணைந்துள்ளார்.

News March 13, 2026

BREAKING: வரலாறு காணாத சரிவு.. மிகப்பெரிய தாக்கம்

image

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 20 பைசா சரிந்துள்ளது. இதனால் வரலாறு காணாத அளவுக்கு ₹92.45 என்ற நிலைக்கு ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளது. மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போரால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்ததே இதற்கு முக்கிய காரணம். அதேபோல், இந்திய பங்குச் சந்தையில் இருந்து வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் வெளியேறியதும் சரிவை அதிகரித்துள்ளது.

error: Content is protected !!