News January 4, 2025
ஏன் இந்த பாரபட்சம் முதல்வரே?

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமைக்கு எதிராக போராடுவோரை திமுக அரசு தொடர்ச்சியாக கைது செய்து வருகிறது. கடந்த வாரம் அதிமுக, நாதகவினர் கைதான நிலையில் நேற்று மதுரையில் போராடிய பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். ஆனால், அதே மதுரையில் நேற்று டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக வைகோ போராடினார். மத்திய அரசுக்கு எதிராக போராடினால் மட்டும் அனுமதி வழங்கும் திமுக அரசு, அவர்களுக்கு எதிரான போராட்டத்தை தடுப்பது ஏன்?
Similar News
News September 15, 2025
ஹோட்டல் ரூமில் ரகசிய கேமரா இருக்கான்னு தெரியணுமா?

வெளியூர்களுக்கு செல்லும் போது ஹோட்டல்களில் தங்க வேண்டிய கட்டாயம் உருவாகிறது. அப்படி தங்கியிருக்கும் அறையில் ஏதாவது கேமராக்கள் மறைத்து வைக்கப்பட்டு இருக்குமா என்ற ஒருவித பயத்துடனே தங்க வேண்டியுள்ளது. எனவே அடுத்த முறை ஹோட்டல் அறையில் தங்க நேரும் போது அந்த அறை பாதுகாப்பானதா என்பதை சில டிரிக்குகள் மூலம் அறிந்துகொள்ளலாம். டிரிக்குகளை தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் மேலே Swipe செய்து பாருங்கள்.
News September 15, 2025
விஜய்யின் வருகை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: வைகோ

விஜய்யின் அரசியல் பிரவேசம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். திரையில் முன்னணி நட்சத்திரமாக இருப்பதாக, அவரை காண மக்கள் கூடுவதாகவும், ஆனால் தேர்தல் களத்தில் அது எடுபடாது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், தங்களது மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றியை தடுக்கும் சக்தியை விஜய்யால் ஏற்படுத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
News September 15, 2025
ITR தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு? IT விளக்கம்

ITR தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களை வருமான வரித்துறை மறுத்துள்ளது. இது முற்றிலும் வதந்தி எனவும், ITR தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்பதையும் வருமான வரித்துறை உறுதி செய்துள்ளது. முன்னதாக, வரும் 30-ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்படுவதாக தகவல் வெளியானது. நாடு முழுவதும் இதுவரை 6 கோடிக்கும் அதிகமானோர் ITR தாக்கல் செய்துள்ளனர்.