News December 11, 2024
மன்னரை உருவாக்கியவருக்கு ஏன் திடீர் கோவம்? அமீர்

திருமாவளவனை தனிமைப்படுத்த நினைக்கும் அரசியல் புரோக்கர்களை எதிர்த்து களமாட வேண்டிய நேரம் இது என இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார். “மக்களுக்கு தெரியாமல் மன்னரை உருவாக்கியவர், பதவி கிடைக்காததால், மக்களிடம் பிரசாரம் செய்ய போவதாக வீடியோ வெளியிடுகிறார், என்ன கொடுமை சார் இது” என்று அவர் பதிவிட்டுள்ளார். ஆதவ் அர்ஜூனாவை அமீர் விமர்சித்து வருகிறார்.
Similar News
News August 14, 2025
J&K வழக்கு: பஹல்காம் தாக்குதலை சுட்டிக்காட்டிய SC

ஜம்மு & காஷ்மீருக்கான (J&K) சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவு 2019-ல் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதன் மீதான இன்றைய விசாரணையின்போது, 8 வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு SC உத்தரவிட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலை சுட்டிக்காட்டிய கோர்ட், J&K-யின் நிலையை கவனிக்காமல் விட்டுவிட முடியாது என்றும் தெரிவித்துள்ளது.
News August 14, 2025
சற்றுமுன்: ‘யுத்த நாயகி’ காலமானார்..

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் லெப்டினன்ட் ஆஷா சஹாய் (97) பாட்னாவில் காலமானார். ஜப்பானில் பிறந்த இவர், நேதாஜியால் ஈர்க்கப்பட்டு, 17 வயதில் INA-வில் சேர்ந்தார். இந்திய தேசிய ராணுவத்தின் (INA) ஜான்சி ராணி படைப்பிரிவில் லெப்டினன்ட்டாக பணியாற்றியவர். இவரது தந்தை நேதாஜிக்கு அரசியல் ஆலோசகராகவும் இருந்தார். நாளை 79-வது சுதந்திர தினத்தை கொண்டாடவிருக்கும் வேளையில், மகத்தான தியாகியை இந்தியா இழந்துள்ளது.
News August 14, 2025
100 Thug life-க்கு சமமா கூலி? கதறும் நெட்டிசன்கள்..

பெரிய ஹைப்புக்கு மத்தியில் கூலி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் தலைவர் மாஸ், அனிருத் பாட்டு தெறி என்றெல்லாம் கொண்டாடி கொளுத்தினாலும், இணையத்தில் FLOP என்ற ஹேஷ்டேக்குடன் தோல்விப் படம் என நெட்டிசன்கள் பதிவிட்டுவருகிறார்கள். படத்தில் சண்டை காட்சிகள் அதிகமாக வருவதாகவும், பழைய கதை, மிகப்பெரிய ஏமாற்றம் எனவும் கலவையான ரிவ்யூக்கள் வருகின்றன.