News March 26, 2025
துக்க வீட்டில் கோஷம் எதற்கு..?

ஒரு பிரபலம் மரணமடைந்து விட்டால், அன்று அவர்கள் வீட்டில் கூட்டம் அலைமோதும். அஞ்சலி செலுத்த வருகிறார்களோ, இல்லையோ, வரும் மற்ற பிரபலங்களைக் காணவே கூட்டம் குவிகிறது. இதில், யாராவது வந்தால், கூச்சலிட்டு கோஷமும் எழுப்புவார்கள். அங்கே வேதனையில் தவிப்பவரின் நிலை, கொஞ்சம் கூட உணர முடியாதா. அவர்களும் மனிதர்கள் தானே. இனியாவது கொஞ்சம் கண்ணியம் காப்போமே. துக்க வீட்டில், ரசிகர்களின் கோஷமும் எதற்கு?
Similar News
News December 15, 2025
ராகுல் பற்றிய புகாரால் முக்கிய தலைவர் அதிரடி நீக்கம்

ராகுல் காந்தி குறித்து சோனியா காந்தியிடம் புகார் அளித்த ஒடிசா மூத்த தலைவரும் EX MLA-வுமான முகமது மொகிம் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 5 பக்க கடிதத்தில் ராகுல், மல்லிகார்ஜுன கார்கே இளைஞர்களுடன் இணைந்து செயல்படவில்லை. அவர்களால்தான் ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்டோர் காங்கிரஸில் இருந்து விலகியதாக மொகிம் குற்றம்சாட்டியிருந்தார். இவ்விவகாரம் காங்கிரஸில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
News December 15, 2025
செல்போன் ரீசார்ஜில் இனி இலவசம்.. ஜியோ ஆஃபர்

ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு ‘HAPPY NEW YEAR 2026’ என்ற பெயரில் புதிய பிளான்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ₹500-க்கு ரீசார்ஜ் செய்தால், 28 நாள்கள் வேலிடிட்டியுடன் தினமும் 2GB டேட்டா பயன்படுத்தலாம். அன்லிமிட்டெட் 5G சேவையும் கிடைக்கும். மேலும், ஹாட்ஸ்டார், யூடியூப் பிரீமியம் உள்ளிட்ட சந்தாவை பெறலாம். அதுமட்டுமின்றி, 18 மாதங்களுக்கு கூகுள் ஜெமினி புரோ சந்தாவை இலவசமாக பயன்படுத்தலாம். SHARE IT.
News December 15, 2025
ஒரு வாரத்திற்கு 4 நாள் வேலை செய்தால் போதுமா?

கடந்த மாதம் அமலான புதிய தொழிலாளர் சட்டத்தின் படி, வாரத்திற்கு 4 நாள் வேலை, 3 நாள்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவி வருகிறது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள தொழிலாளர் அமைச்சகம், ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்தால், வாரத்தில் 4 நாள் வேலை செய்வது போதுமானது; ஆனால் இது ஒரு ஆப்ஷன் மட்டுமே, நிறுவனமும் ஊழியர்களும் ஏற்று கொண்டால் இதை பின்பற்றலாம் என தெரிவித்துள்ளது.


