News November 21, 2024
CM ஸ்டாலின்- அதானி ரகசிய சந்திப்பு ஏன்? ராமதாஸ்

கடந்த ஜூலை மாதம் சென்னையில் CM ஸ்டாலினை, தொழிலதிபர் அதானி ரகசியமாக சந்தித்து பேசியதற்கான நோக்கம் என்ன என ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். அதானி குழுமத்தால் கையூட்டு பெற்ற நிறுவனங்கள் பட்டியலில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயரும் உள்ளதாக குற்றஞ்சாட்டிய அவர், இது குறித்து விசாரணைக்கு ஆணையிடவும் வலியுறுத்தியுள்ளார். ரகசிய சந்திப்பு குறித்து தமிழக அரசு விளக்கமளிக்கவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
Similar News
News August 19, 2025
மயில்சாமி அண்ணாதுரையை வைத்து தேர்தல் கணக்கு?

து.ஜனாதிபதி வேட்பாளராக மயில்சாமி அண்ணாதுரையை INDIA கூட்டணி அறிவித்தால் அது தேர்தல் நோக்கம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். NDA கூட்டணி தமிழர் ஒருவரை வேட்பாளராக அறிவித்த பிறகு, INDIA கூட்டணியும் தமிழரை அறிவித்தால் அது போட்டியாகவே இருக்கும் என்றார். மேலும், துணை ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்புக்கும் தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கும் தொடர்பு இல்லை என அவர் மறுத்துள்ளார்.
News August 19, 2025
சிவாஜிக்கு பிறகு வடிவேலு தான் சிறந்த நடிகர்: வெற்றிமாறன்

தமிழ் சினிமாவில் சிவாஜிக்கு பிறகு மிகப்பெரிய ஒரிஜினல் நடிகன் என்றால் அது வடிவேலு தான் என இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். வடிவேலுவுக்கு படிப்பும், சினிமா பின்புலமும் கிடையாது, ஆனால் ஒவ்வொரு படத்திலும் கேரக்டராகவே வாழ்வார் என அவர் கூறியுள்ளார். மேலும், வடிவேலு வெறும் காமெடி நடிகர் கிடையாது, கதாபாத்திரமாகவே மாறக்கூடியவர் என்றும் தெரிவித்துள்ளார்.
News August 19, 2025
அதிமுக பொ.செயலாளர் வழக்கு.. HC உத்தரவு

அதிமுக பொதுச்செயலாளராக தேர்வானதை எதிர்த்த வழக்கை நிராகரிக்க கோரி EPS மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை சென்னை உரிமையியல் கோர்ட்டின் நீதிபதி தள்ளுபடி செய்திருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து EPS சென்னை HC-ல் மனுதாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, விசாரணையை செப்.3ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.