News September 3, 2025
பாஜகவுடன் கூட்டணி ஏன்? EPS விளக்கம்

திமுக கூட்டணி கட்சிகளே ஜாக்கிரதை, ஸ்டாலின் உங்களை விழுங்கிவிடுவார் என EPS விமர்சித்துள்ளார். திமுக அகற்றப்பட வேண்டும் என்பதற்காகவே பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், விவசாயிகளுக்கு திமுக அரசு துரோகம் இழைத்து வருவதாகவும், பொதுக்கூட்டங்களில் மக்களின் எழுச்சியை பார்க்கும் போது அதிமுகவிற்கு பிரகாசமான ஒளி இருப்பது தெரிவதாகவும் கூறியுள்ளார்.
Similar News
News September 4, 2025
மலையாள சினிமாவில் கும்பமேளா மோனலிசா

ஒரே நைட்டில் ஃபேமஸானவர்கள் பட்டியலில் எப்போதும் கும்பமேளா மோனலிசா போஸ்லேவுக்கு தனியிடம் உண்டு. இவர் பாலிவுட்டிலும் படம் நடித்து வருகிறார். இதனிடையே, சில நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக கேரளாவும் வந்தார். இந்நிலையில், மலையாள சினிமா அவரை வரவேற்றுள்ளது. இதன்படி, நடிகர் கைலாஷ் உடன் இணைந்து ‘நாகம்மா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பூஜை வீடியோ தற்போது வைரலாகிறது.
News September 4, 2025
30 நாள்களுக்கு ஒருமுறை செக் செய்யும் யூடியூப்

யூடியூப்பின் Subscription வகைகளில் ஒன்றான Premium Family கணக்கில் இருக்கும் அனைவரும் ஒரே முகவரியில் வசிக்கவில்லை என்றால், இதன் சேவை 14 நாள்களுக்கு நிறுத்தப்படும் என்ற புதிய விதி வந்துள்ளது. இதன்படி, 30 நாள்களுக்கு ஒருமுறை இக்கணக்கில் உள்ளவர்களின் Location-ஐ யூடியூப் தானாக சரிபார்க்குமாம். Password பகிர்வதை கட்டுப்படுத்த இந்த முறை பின்பற்றப்பட உள்ளது. கவனமா இருங்க பயனர்களே!
News September 4, 2025
நக்சல் ஒழிக்கப்படும் வரை அரசு ஓயாது: அமித்ஷா

இந்தியாவில் நக்சல்களை ஒழிக்கும் நோக்கில் ‘ஆபரேஷன் பிளாக் ஃபாரஸ்ட்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இதுகுறித்து பேசிய அமித்ஷா, 2026, மார்ச் 31-க்குள் நக்சல் தீவிரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும் என சூளுரைத்தார். மேலும் நக்சல் பயங்கரவாதிகள் சரணடையும் வரை (அ) கைதாகும் வரை (அ) ஒழிக்கப்படும் வரை PM மோடி தலைமையிலான அரசு ஓயாது என்றும் எச்சரிக்கை விடுத்தார்.