News August 25, 2024
சாதிவாரி கணக்கெடுப்பிற்கு ஆதரவு ஏன்? சிராக் பதில்

சாதிவாரி கணக்கெடுப்பை இந்தியாவில் அவசியம் நடத்த வேண்டும் என மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் வலியுறுத்தியுள்ளார். மத்திய, மாநில அரசுகள் சாதியை மனதில் வைத்து திட்டங்கள் கொண்டு வரும் போதும், அதற்கான புள்ளி விவரங்கள் அரசிடம் இருக்க வேண்டியது அவசியம் என்றார். அரசின் திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு செல்வதற்கு, சாதிவாரி கணக்கெடுப்பு மையமாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.
Similar News
News September 1, 2025
3 குழந்தைகள்.. வினோத காரணம் கூறும் ஜான்வி கபூர்

தனக்கு 3 குழந்தைகளை பெற்றுக்கொள்ள ஆசை என்று ஜான்வி கபூர் கூறியுள்ளார். 2 குழந்தைகள் இருந்தால் சண்டையிடுவார்கள், 3-வதாக ஒரு குழந்தை இருந்தால் அவர்களை சமாதானம் செய்ய உதவியாக இருக்கும் என்றும் அவர் விளக்கம் கொடுத்துள்ளார். அத்துடன் தனது அதிர்ஷ்ட எண் 3 என்பதால், 3 குழந்தைகள் பெற வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதை கேட்ட நெட்டிசன்கள், ‘இப்படி ஒரு காரணமா’ என கேட்டு வருகின்றனர்.
News September 1, 2025
ஹமாஸ் முக்கிய தலைவர் கொல்லப்பட்டார்

பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் இருக்க, இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், தாக்குதலில் ஹமாஸ் ஆயுதப் படையின் செய்தித் தொடர்பாளர் அபு ஒபெய்டா கொல்லப்பட்டதாக, இஸ்ரேலின் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார். இதனை ஹமாஸ் அமைப்பு உறுதி செய்யாத நிலையில், ஹமாஸ் ராணுவத் தலைவர் முகமது சின்வார் கொல்லப்பட்டதை, அந்த அமைப்பு உறுதி செய்துள்ளது.
News September 1, 2025
இன்றைய நல்ல நேரம்

▶செப்டம்பர் 1, ஆவணி 16 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்:6:15 AM – 7:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM ▶திதி: நவமி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: வளர்பிறை