News April 17, 2025
அட்சய திருதியில் ஏன் தங்கம் வாங்க வேண்டும்?

சித்திரை மாத அமாவாசைக்கு அடுத்த வளர்பிறை திருதியையே அட்சயதிருதியை. அட்சயம் என்றால் தேயாது, குறையாது, வளர்தல் என்று பொருள். நன்மைகளை அள்ளிக் கொடுக்கும் இந்த நாளில், தானங்கள் செய்து புண்ணியத்தைப் பெறுவது மிகவும் சிறப்பு. இந்த நாளில் செய்யப்படும் புதிய தொடக்கங்கள், முதலீடுகள் அனைத்தும் அதிர்ஷ்டத்தையும், செழிப்பையும் கொண்டு வரும் என்பது நம்பிக்கை. வரும் ஏப்ரல் 30-ம் தேதி இந்த திருதியை வருகிறது.
Similar News
News April 19, 2025
வெயில் கொளுத்தும்.. மதியம் வெளியே வராதீங்க

பல்வேறு இடங்களில் கடந்த சில நாள்களாக வெயில் கொளுத்தி வருகிறது. இந்நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் என வானிலை மையம்(IMD) எச்சரித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட 2 – 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும். எனவே, பொதுமக்கள் மதியம் (12 -3 மணி வரை) வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே சென்றால், அடிக்கடி நீர், இளநீர், மோர் போன்றவற்றை குடிக்கவும்.
News April 19, 2025
JEE முதல்நிலை 2-ம் கட்டத் தேர்வு முடிவு வெளியானது!

JEE 2-ம் கட்ட முதல்நிலை(மெயின்) தேர்வு முடிவுகள் இன்று(ஏப்.19) வெளியானது. IIT, NIT போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் UG பொறியியல் படிப்புகளில் சேர JEE முதல்நிலை, முதன்மை என 2 கட்டத் தேர்வுகள் நடத்தப்படுகிறது. கடந்த 2 – 9-ம் தேதி வரை நடைபெற்ற இத்தேர்வை 8 லட்சம் பேர் எழுதிய நிலையில், அதன் முடிவுகள் <
News April 19, 2025
தொடரும் RCB-யின் சோகம்!

நடப்பு IPL தொடரில், இதுவரை 7 மேட்ச்சில் விளையாடி இருக்கும் RCB, அதில் 4-ல் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், தோல்வியடைந்த 3 மேட்சும் பெங்களூருவில் நடைபெற்ற போட்டிதான். வெளி கிரவுண்டில் வெற்றி பெற்ற அணியால், பாவம்…. சொந்த மண்ணில் ஒரு வெற்றியை கூட பெறமுடியவில்லை!