News May 7, 2024
என்.டி.ஏ கூட்டணி ஏன் 400 இடங்களில் வெல்ல வேண்டும்?

வாக்கு வங்கிக்காக ஓபிசி இட ஒதுக்கீட்டை இஸ்லாமியர்களுக்கு காங்கிரஸ் வழங்குவதைத் தடுக்க பாஜக 400 இடங்களில் வென்றாக வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். லக்னோவில் பேசிய அவர், “இந்தியாவின் ஒரு பகுதியாக ஜம்மு & காஷ்மீர் தொடர, அயோத்தி ராமர் கோவிலுக்கு பூட்டு போடாமல் தடுக்க, பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றால், என்.டி.ஏ கூட்டணி மக்களவையில் 400 தொகுதிகளில் வெல்ல வேண்டும்” எனக் கூறினார்.
Similar News
News September 24, 2025
அதிமுக ஆபிஸின் அதிகாரம் டெல்லியில் உள்ளது: கனிமொழி

அமித்ஷா வீட்டில் தான் அதிமுகவின் ஆபீஸ் உள்ளது என்று கனிமொழி கூறியதற்கு, திமுகவின் அறிவாலயத்தை காப்பாற்றி கொடுத்ததே ஜெயலலிதா தான் என்று EPS பதிலடி கொடுத்திருந்தார். இந்நிலையில், அதிமுக ஆபிஸ் பில்டிங் மட்டுமே இங்கு உள்ளது, ஆபிஸின் அதிகாரம் டெல்லியில் உள்ளது என்று கனிமொழி விமர்சித்துள்ளார். என்னதான் கர்சீப்பை வைத்து மறைத்தாலும், அது நீங்கள் (EPS) தான் என்று பட்டவர்த்தனமாக தெரிவதாகவும் சாடினார்.
News September 24, 2025
தேசிய விருதுடன் திரையுலக நட்சத்திரங்கள்

71-வது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த நடிகர் – ஷாருக்கான், சிறந்த துணை நடிகர் – எம்.எஸ் பாஸ்கர், சிறந்த துணை நடிகை – ஊர்வசி, சிறந்த இசையமைப்பாளர் – ஜிவி பிரகாஷ், சிறந்த திரைக்கதை – ராம்குமார், தாதா சாகேப் பால்கே – மோகன்லால் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. நட்சத்திரங்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதோடு, SWIPE செய்து புகைப்படங்களை தவறாமல் பாருங்க..
News September 23, 2025
சிறுநீர் கழிக்கையில் எரிச்சல்.. காரணம் என்ன?

மனிதர்களுக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உணர்வு ஏற்படுவதற்கு சிறுநீரில் கிருமித் தொற்று, சிறுநீர் பாதையில் அடைப்பு ஆகியவை காரணமாகும். இதற்கு சிறுநீர் பரிசோதனை மற்றும் ஸ்கேன் செய்து வயிற்றில் கல் இருக்கிறதா என அறிய வேண்டும். அதன் பிறகு எண்டோஸ்கோபி அறுவை சிகிச்சை அல்லது மருந்துகள் எடுத்துக்கொண்டு சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சலுக்கு தீர்வு காணலாம்.