News October 1, 2024
T20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றது ஏன்? ரோஹித் பேட்டி

T20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றது குறித்து முதன்முறையாக ரோஹித் ஷர்மா விளக்கம் அளித்துள்ளார். 17 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வருவதாகவும், அத்துடன் T20 உலகக்கோப்பையை இந்தியா வென்றதே தாம் அந்த விளையாட்டில் இருந்து விடை பெற சரியான தருணம் என கருதியதாகவும் அவர் கூறியுள்ளார். சிறப்பாக விளையாடும் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்க செய்வதும் தமது ஓய்வுக்கு ஒரு காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 13, 2025
ஹிமாச்சலில் 229 பேர் பலி: சேத மதிப்பு ₹2000 கோடி

ஹிமாச்சலில் பருவமழை மற்றும் விபத்துகளால் 229 பேர் பலியாகியுள்ளனர். இதில் நிலச்சரிவு, வெள்ளம், கட்டிட இடிபாடுகளில் சிக்கி 119 பேரும், சாலை விபத்துகளில் 110 பேரும் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர 395 சாலைகள், 669 டிரான்ஸ்பார்மர்கள், 529 குடிநீர் திட்டங்கள் சேதமடைந்திருப்பதாகவும், மாநிலத்தின் மொத்த பொருளாதர இழப்பு சுமார் ₹2,007.4 கோடி எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
News August 13, 2025
பிடல் காஸ்ட்ரோ பொன்மொழிகள்

*புரட்சியில் ஆண்கள் மட்டுமல்ல, பெண்களின் பங்களிப்பும் அவசியம். அப்போதுதான் உண்மையான மாற்றம் நடக்கும்.
*போராடும் நேரத்தில் அதை வீண் முயற்சி என்பார்கள், வெற்றியை அடைந்த பிறகு அதையே விடாமுயற்சி என புகழ்வார்கள்.
*கஷ்டங்கள் இல்லையெனில், போராடும் ஆவல் நமக்கு முற்றிலும் மறைந்து விடும்.
* உன்னை அதிகமாக விமர்சிக்கும் மனிதன் உன்னைப் பற்றி மிகுந்த அச்சத்துடன் இருக்கிறான்.
News August 13, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: அறிவுடைமை ▶குறள் எண்: 426 ▶குறள்: எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவ தறிவு. ▶ பொருள்: உயர்ந்தோர் வழியில் உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ அதற்கேற்ப நடந்து கொள்வதே அறிவாகும்.