News August 19, 2024
கோலி, ரோஹித்துக்கு ஓய்வு ஏன்? கவாஸ்கர் கேள்வி

கோலி மற்றும் ரோஹித் இருவரும் துலீப் கோப்பை தொடரில் ஏன் விளையாடவில்லை என கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால், இருவரும் வங்கதேச தொடரில் பயிற்சி எடுக்காமலேயே களமிறங்க உள்ளதாக கூறிய அவர், அணியின் நலனுக்கு அது உகந்ததாக இருக்காது என்றும் அதிருப்தி தெரிவித்தார். 35 வயதை கடந்த வீரர்கள் தொடர்ந்து விளையாடுவது, அவர்களின் தரத்தை உயர்த்த பெரிதும் உதவியாக இருக்கும் என்றும் கூறினார்.
Similar News
News August 15, 2025
GALLERY: PM மோடியும்.. சுதந்திர தின தலைப்பாகையும்!

ஒவ்வொரு ஆண்டும் PM மோடி, சுதந்திர தினத்தில் கொடியேற்றும் போது, அவரின் தலைப்பாகை தனி கவனம் பெறுகிறது. ராஜஸ்தானி தலைப்பாகை அணிவதை வழக்கமாக கொண்டுள்ள அவர், அதன் நிறத்தை மட்டும் ஒவ்வொரு ஆண்டும் மாற்றுகிறார். 5 மீட்டர் துணியில் தயாரிக்கப்படும் இந்த தலைப்பாகை சுயமரியாதையின் அடையாளமாக கருதப்படுகிறது. 2014- 2025 வரை PM மோடி அணிந்த தலைப்பாகைகளை மேலே அடுத்தடுத்த படங்களில் கொடுத்துள்ளோம்.
News August 15, 2025
வைரமுத்து ‘Me too’ குற்றவாளி: ஒருமையில் சாடிய H.ராஜா

வைரமுத்து ஒரு ‘Me too’ குற்றவாளி, அவர் மீது பல பெண்கள் புகார் அளித்துள்ளதாக H.ராஜா கடுமையாக சாடியுள்ளார். திமுக ஆட்சி என்பதால் வைரமுத்து இன்னும் கைது செய்யப்பட்டவில்லை என்றும் விமர்சித்துள்ளார். ராமரை அவமரியாதையாக பேசிய வைரமுத்து ஒரு மனநோயாளி எனவும் அவரை ஒருமையில் சாடியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் <<17369941>>வைரமுத்து ராமரை இழிவுபடுத்தியதாக <<>>ஏற்கெனவே போராட்டங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
News August 15, 2025
ரத்தமும் தண்ணீரும் ஒன்றாக ஓடாது: PM மோடி ஆவேசம்

பஹல்காமில் மதத்தின் அடிப்படையில் தாக்குதல் நடத்தியவர்களுக்கு இந்தியா பதிலடி கொடுத்து அவர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளதாக சுதந்திர தின உரையில் PM மோடி குறிப்பிட்டுள்ளார். செங்கோட்டையில் ஆவேசமாக பேசிய அவர், பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டல்கள் நம்மிடம் எடுபடாது என்றார். சிந்து நதி இந்திய விவசாயிகளுக்கு சொந்தமானது எனவும் அதனை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம், ரத்தமும் தண்ணீரும் ஒன்றாக ஓடாது என்றார்.