News April 26, 2024
தமிழகத்தில் மின்தடை ஏன்? அதிகாரிகளுடன் ஆலோசனை

கோடையில் சீரான மின் விநியோகம் வழங்குவது, மின் தடை தொடர்பாக மின்சாரத் துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, மாநிலத்தில் போதுமான மின் உற்பத்தி செய்யப்படுவதாகவும், விநியோகத்தில் ஏற்படும் சிக்கலால் மின் தடை ஏற்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இரவு 10 மணிக்கு மேல் அதிகளவு மின்சாதனங்கள் பயன்படுத்தப்படுவதால் மின்மாற்றிகளில் பிரச்னை ஏற்படுவதாகவும் கூறினர்.
Similar News
News March 4, 2026
SPORTS 360°: ஸ்மிருதி மந்தனா மீண்டும் நம்பர் 1

*ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் முதல் சுற்றில், லக்ஷயா சென் 23-21, 19-21, 21-17 என்ற செட் கணக்கில் உலகின் நம்.1 வீரர் ஷி யூவை வீழ்த்தினார் * கலப்பு இரட்டையரில் துருவ், தனிஷா இணை 2-வது சுற்றுக்கு தகுதி *ஐசிசி மகளிர் ODI பேட்டர் தரவரிசையில் ஸ்மிருதி மந்தா மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார் * U-17 நட்புறவு கால்பந்தில் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் மியான்மரை வீழ்த்தியது.
News March 4, 2026
பாஜகவை விமர்சிக்க விஜய்க்கு தைரியம் இருக்கா? TKS

விஜய்க்கு உண்மையில் அரசியலே தெரியாது என டிகேஎஸ் இளங்கோவன் விமர்சித்துள்ளார். மக்கள் நலனுக்காக எவ்வித போராட்டங்களிலும் ஈடுபடாமல், மக்களுக்காக குரல் கொடுக்காமல் நேரடியாக CM-ஆக வேண்டும் என்ற குறிக்கோளோடு மட்டுமே விஜய் அரசியலுக்கு வந்துள்ளதாகவும் சாடியுள்ளார். அவருக்கு தைரியம் இருந்தால் முதலில் பாஜகவை வெளிப்படையாக விமர்சித்து பேசட்டும் என்றும் சவால் விட்டுள்ளார். .
News March 4, 2026
ஈரான் மீதான டிரம்பின் குற்றச்சாட்டு பொய்யா?

ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்கும் ஒருங்கிணைந்த திட்டத்திற்கான எந்தவொரு ஆதாரமும் தங்களுக்கு கிடைக்கவில்லை என ஐநாவின் சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) தலைவர் ரஃபேல் க்ரோஸி தெரிவித்துள்ளார். ஈரானின் அணு ஆயுத திட்டத்தை தடுக்கவே ஈரானுடன் போரிட்டு வருவதாக டிரம்ப் குற்றஞ்சாட்டியிருந்தார். இந்நிலையில் க்ரோஸின் பதில் ஈரானை முழு மூச்சுடன் தாக்கி வரும் டிரம்பின் முதன்மை குற்றச்சாட்டையே கேள்வி குறியாக்கியுள்ளது.


