News March 15, 2025
தனுஷ்கோடியில் பூநாரை சரணாலயம் ஏன்?

பூநாரை என தமிழில் அழைக்கப்படும் ஃப்ளமிங்கோ பறவைகள் ஆண்டுதோறும் நவம்பர் முதல் மார்ச் வரை தனுஷ்கோடிக்கு அதிக அளவில் வலசை வருகின்றன. சேறு மற்றும் சகதியில் உள்ள பாசிகளை உணவாக உட்கொள்ளும். பல்லுயிர்ப் பெருக்கம் நன்றாக உள்ள இடங்களையே இவை பெரும்பாலும் வலசைக்கு தேர்ந்தெடுக்கும். இதைக் கருத்தில் கொண்டே தனுஷ்கோடியை பூநாரை சரணாலயமாக மாற்ற பட்ஜெட்டில் முடிவு எடுக்கப்பட்டது.
Similar News
News March 15, 2025
பாஜகவால் ஜெயலலிதா ஆட்சியை தர முடியும்: தினகரன்

தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சியை பாஜகவால் தர முடியும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வரும் என்றும், அதில் அதிமுக நிச்சயம் இடம் பெறும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பெரியார், தங்களுக்கு கொள்கை ரீதியான தலைவராக இருந்தாலும், அவரது கடவுள் மறுப்பு, பிராமணர் எதிர்ப்பு கொள்கையை ஏற்கவில்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.
News March 15, 2025
பனை, பலா சாகுபடியை ஊக்குவிக்க நிதி!

உழவர்கள் மேம்பாட்டுக்காக ₹10 கோடி மதிப்பில் முந்திரி வாரியம் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பனை சாகுபடியை ஊக்குவிக்க பனை மேம்பாட்டு இயக்கத்திற்கு ₹1.60 கோடி நிதி ஒதுக்கீடு, பலா மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் பலா சாகுபடியை ஊக்குவிக்க ₹5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 15, 2025
சீமைக் கருவேல மரங்களை அகற்ற புதிய திட்டம்!

நிலத்தடி நீரை உறிஞ்சி வேளாணை அழிக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற பட்ஜெட்டில் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் 2,500 ஏக்கரில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றி, அங்கு மிளகாய் சாகுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ளார். சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்கு இது சரியான வழியாக இருக்கும் என விவசாயிகள் கருதுகின்றனர்.