News October 23, 2024
அணுஆயுத சோதனைக்கு வெங்காயம், உருளை ஏன்?

அணுஆயுத சோதனையில் வெங்காயம், உருளைக்கிழங்கை இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் பயன்படுத்துகின்றன. அது ஏன் என்று பார்க்கலாம். அணுஆயுத சோதனையின்போது வெளிப்படும் ஆல்பா, பேடா, காம்மா கதிர்களை கிரகித்து கொள்ளும் சக்தி வெங்காயத்துக்கு உண்டு. ஆதலால் வெங்காயமும், அத்துடன் அணுஆயுத சோதனை, காய்கறிகளுக்கு எந்தளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை அறிய உருளையும் பயன்படுத்தப்படுகிறது. SHARE IT.
Similar News
News November 21, 2025
புதுகைக்கு மாநில பாஜக தலைவர் வருகை

தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் புதுக்கோட்டைக்கு 26ஆம் தேதி வருகை தருவதை முன்னிட்டு, ஆயத்த கூட்டம் மாவட்டத் தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் பாஜக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாநில செயற்குழு உறுப்பினர் ஏவிசிசி கணேசன் கலந்து கொண்டு பேசினார். இதில் மாநில மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் சார்பு அணி பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் உள்ளனர்.
News November 21, 2025
BREAKING: புதிய கட்சி தொடங்கும் ராமதாஸ்!

பாமகவை சட்ட ரீதியாக கைப்பற்றும் பணிகள் ஒருபுறம் நடந்து வரும் நிலையில், தனது ஆதரவாளர் ஒருவர் பெயரில் அய்யா பாட்டாளி மக்கள் கட்சி(APMK) தொடங்க ராமதாஸ் திட்டமிட்டுள்ளார். இதற்காக எந்த கட்சியிலும் இல்லாத 100 பேரிடம் பிரமாணப்பத்திரம் வாங்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. 2026 பேரவைத் தேர்தலில் மாம்பழம் சின்னம் தனது தரப்புக்கு கிடைக்காவிட்டால் பொது சின்னத்தை பெற இத்திட்டம் எனக் கூறப்படுகிறது.
News November 21, 2025
இளையராஜா போட்டோக்களை பயன்படுத்த தடை

இளையராஜாவின் புகைப்படங்களை SM-ல் பயன்படுத்த தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட வலைதளங்கள் மற்றும் மியூசிக் நிறுவனங்களுக்கு எதிராக இளையராஜா தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தனது பெயர், புகைப்படம், இசைஞானி என்ற பட்டம் என எதையும் பயன்படுத்தக்கூடாது என்ற இளையராஜாவின் முறையீடு ஏற்கப்பட்டுள்ளது.


