News August 17, 2024
ராகுலை ஏன் அழைக்கவில்லை? ஜெயக்குமார்

பாஜக-திமுக இடையே கள்ள உறவு இருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக முதலில் அறிவித்துவிட்டு, பின்னர் விருந்தில் முதல்வர் உள்ளிட்ட 8 அமைச்சர்கள் பங்கேற்றது ஏன் என சந்தேகம் எழுப்பிய அவர், ராஜ்நாத் சிங்கை கருணாநிதி நாணய வெளியீட்டு விழாவுக்கு அழைக்க முடிந்த திமுகவால், ராகுலை ஏன் கூப்பிடவில்லை என வினவினார்.
Similar News
News December 24, 2025
உடலை மெருகேற்றும் 12-3-30 பயிற்சி

உடலை வலுவாக்குவதற்கு தினமும் ரன்னிங், எடை தூக்குதல் உள்ளிட்ட கடினமான பயிற்சிகள் செய்வதைவிட 12-3-30 பயிற்சி நல்ல பலன்களை தரும் என உடற்பயிற்சி நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த பயிற்சியை செய்வதற்கு டிரெட்மில்லை 12 % சாய்வாக (Incline) அமைத்து மணிக்கு 3 மைல் வேகத்தில் 30 நிமிடங்கள் இடைவெளி இன்றி நடக்க வேண்டும். இதனால் உடலில் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கும், தசை வலிமை கூடும், கொழுப்பு கரையும் என கூறப்படுகிறது.
News December 24, 2025
திமுக அரசின் போலி தமிழ்ப்பற்று: அண்ணாமலை

SI பணிக்கான, முதன்மைத் தேர்வில் தமிழ் கேள்விகள் நீக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். வழக்கமாக பகுதி 2-ல் 10 தமிழ் கேள்விகள் இடம்பெறும், ஆனால் இம்முறை எந்த முன்னறிவிப்புமின்றி அவற்றை நீக்கி வினாத்தாளை மாற்றியுள்ளதாக அவர் சாடியுள்ளார். இது திமுக அரசின் போலி தமிழ் பற்றை வெளிச்சமிட்டு காட்டியுள்ளதாக X-ல் கூறியுள்ள அவர், தேர்வர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
News December 24, 2025
தினமும் காலையில் இந்த மேஜிக் Health Drink குடிங்க!

முருங்கைக்கீரை பல்வேறு ஊட்டச்சத்துக்களை கொண்ட ஒரு ‘சூப்பர் ஃபுட்’. தினமும் காலையில் இதை கொதிக்க வைத்து, அந்த நீரை பருகினால் உடலில் பல மேஜிக் நடக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். முக்கியமாக, *நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் *குளுக்கோஸ் அளவை சீராக்கும் *நல்ல கொழுப்பை அதிகரிக்கும் *மெட்டபாலிசத்தை சீராக்குகிறது *எடையை குறைக்க உதவும் *மலச்சிக்கலுக்கு தீர்வளிக்கிறது *முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.


