News August 19, 2024

ராகுலை அழைக்காதது ஏன்? CM விளக்கம்

image

கருணாநிதி நூற்றாண்டு நாணய வெளியீட்டு விழாவிற்கு ராகுல் காந்தியை அழைக்காதது பல்வேறு சர்ச்சைகளுக்கு வழிவகுத்தது. குறிப்பாக, BJP உடன் DMK ரகசிய உறவு வைத்துள்ளதாகவும், ராகுலை அழைக்கவில்லை என்றும் எதிர்கட்சியான ADMK கடுமையாக விமர்சித்தது. இதுகுறித்து CM ஸ்டாலின், நாணய வெளியிட்டு விழா திமுக நிகழ்ச்சி அல்ல என்றும், மத்திய அரசின் நிகழ்ச்சி என்பதால் ராகுலை அழைக்கவில்லை எனவும் விளக்கமளித்தார்.

Similar News

News August 15, 2025

இதை செய்யாமல், கூலி படத்தை CM பார்க்கிறார்: சீமான்

image

கூலிக்காக போராடும் மக்களை பற்றி கவலைப்படாமல், கூலி படத்தை CM ஸ்டாலின் பார்க்கிறார் என சீமான் விமர்சித்துள்ளார். சென்னையில் கைதான தூய்மை பணியாளர்களை நேரில் சென்று சந்தித்த சீமான் அதன்பின் பேட்டியளித்தார். அப்போது, மக்களை பற்றி சிந்திக்காதவர்களை தேர்வு செய்தது மக்களின் தவறு என்றார். நாட்டை தூய்மையாக வைத்திருப்பது அரசின் பொறுப்பா அல்லது தனியார் பொறுப்பா எனவும் கேள்வி எழுப்பினார்.

News August 15, 2025

இடஞ்சுழி எழுத்துகள் தெரியுமா?

image

ட, ய, ழ ஆகியவை இடஞ்சுழி எழுத்துகள் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றை எழுதும்போது கையை இடதுபுறமாக வளைத்து (அ) சுழித்து எழுதுவதால் இடஞ்சுழி எழுத்துகளாகும். மாறாக இடதுபக்கம் இருந்து வலப்பக்கம் சுழித்து எழுதப்படுபவை வலஞ்சுழி எழுத்துகளாகும். உ-ம்: அ, எ, ஔ, ண, ஞ ஆகியவை. தமிழ் எழுத்துகளில் பெரும்பாலானவை வலஞ்சுழி எழுத்துகளாகவே உள்ளன. உ-ம்: அ, ஆ, இ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஓ, ஒள, க, ச, ஞ, ண, த, ந, ம, ல, வ, ழ,ள, ன.

News August 15, 2025

ஆக.19-ம் தேதி இந்திய அணி அறிவிப்பு

image

ஆசிய கோப்பைக்கான இந்திய அணி வரும் 19-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. அணித் தேர்வு கூட்டம் முடிந்தபின், அஜித் அகர்கர் அணியை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. உத்தேசமான அணி விவரம்: அபிஷேக், சாம்சன், சூர்யா, திலக், ஹர்திக், கில், துபே, அக்சர், சுந்தர், வருண், குல்தீப், பும்ரா, அர்ஷ்தீப், ஹர்ஷித் / பிரசித், ஜிதேஷ்/ஜுரெல் ஆகியோர். உங்கள் கணிப்பு யார் யார்?

error: Content is protected !!