News September 6, 2025
PAK உடனான போட்டியை புறக்கணிக்காதது ஏன்?

ஆசிய கோப்பையில் PAK உடனான போட்டியை இந்தியா புறக்கணிக்காதது குறித்து BCCI மவுனம் கலைத்துள்ளது. மத்திய அரசு வகுத்துள்ள கொள்கைகளின் படி சர்வதேச, பல தரப்பு போட்டிகளில் மட்டுமே IND அணி விளையாடுவதாகவும், PAK உடனான இருதரப்பு போட்டிகளில் விளையாடாது என்றும் விளக்கம் அளித்துள்ளது. மேலும், சர்வதேச போட்டிகளில் விளையாடாவிட்டால், இந்தியா மீது தடை விதிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
Similar News
News September 7, 2025
கார்களின் விலையை ₹3.49 லட்சம் குறைத்த டொயோட்டா

GST 2.0 எதிரொலியாக டொயோட்டா நிறுவனம், ₹3.49 லட்சம் வரை கார்களின் விலையை குறைத்துள்ளது. Glanza – ₹85,300, Taisor – ₹1.11 லட்சம், Rumion – ₹48,700, Hyryder – ₹65,400, Crysta – ₹1.8 லட்சம், Hycross – ₹1.15 லட்சம், Fortuner – ₹3.49 லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளது. வரும் 22-ம் தேதி முதல் இந்த விலை குறைப்பு அமலுக்கு வர உள்ளது. முன்னதாக, டாடா, மஹிந்திரா, <<17632758>>ரெனால்ட்<<>> நிறுவனங்கள் விலை குறைப்பை அறிவித்தன.
News September 7, 2025
CM திட்டத்தை புறக்கணிக்கும் வருவாய் அலுவலர்கள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களை புறக்கணிக்கப் போவதாக வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. போதிய கால அவகாசம் வழங்காமல் இரவு, பகலாக பணி செய்ய நிர்பந்திக்கப்படுவதாகவும், வரும் 25-ம் தேதி 40,000 வருவாய் அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், விரைவில் காலவரையற்ற வேலை நிறுத்தம் துவங்கும் என்றும் எச்சரித்துள்ளது.
News September 7, 2025
US OPEN: இறுதிப்போட்டியில் நம்.1 VS நம்.2

நாளை (ஞாயிறு) மாலை நடைபெறவுள்ள அமெரிக்க ஓபன் டென்னிஸ் சிங்கிள்ஸ் பைனலில் ஜாக் சின்னர் – கார்ல் அல்காரஸ் மோதுகின்றனர். நேற்று நடைபெற்ற முதல் செமி பைனலில் நம்.2 வீரரான அல்காரஸ், ஜோகோவிச்சை வென்றார். இன்று நடந்த மற்றொரு செமி பைனலில் நம்.1 வீரர் ஜானிக் சின்னர், ஃபெலிக்ஸ் ஆகர் அலியாஸ்மியை வென்றார். இருபெரும் வீரர்கள் மோதும் ஃபைனலில் ஆட்டம் அனல் பறக்கும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.