News August 16, 2024
மகாராஷ்டிராவுக்கு தேர்தல் அறிவிக்காதது ஏன்?

இந்த ஆண்டுக்குள் 4 சட்டமன்றங்களுக்கு தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என, ராஜூவ் குமார் தெரிவித்துள்ளார். இதன்காரணமாகவே முதலில் ஜம்மு காஷ்மீர், ஹரியானாவுக்கும், பின்னர் மகாராஷ்டிரா, ஜார்கண்டிற்கும் தேர்தல் நடைபெறுவதாக கூறினார். பாதுகாப்பு வீரர்களின் எண்ணிக்கையும் ஒரு காரணமென்ற அவர், மகாராஷ்டிராவில் மழை பாதிப்பு மற்றும் தொடர் விழாக்களை கருத்தில் கொண்டும் இம்முடிவு எடுக்கப்பட்டதாக விளக்கமளித்தார்.
Similar News
News December 25, 2025
ஆரவல்லி மலைத்தொடரில் சுரங்க குத்தகைகளுக்கு தடை

ஆரவல்லி மலைத்தொடரில் மொத்தமுள்ள 1.44 லட்சம் சதுர கி.மீட்டரில் 0.19% பகுதிகளில் சுரங்க பணிகளுக்கு அனுமதி அளிப்பதாக மத்திய அரசு கூறியது. இதற்கு எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கவலை தெரிவித்தனர். இந்நிலையில், புதிய நிலையான சுரங்க திட்டங்கள் தயாரிக்கப்படும் வரை, எந்தவொரு புதிய சுரங்க குத்தகைகளுக்கும் அனுமதி அளிக்கக்கூடாது என மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
News December 25, 2025
‘ஜனநாயகன்’ படத்தின் அடுத்த அப்டேட்!

ஜன.9-ம் தேதி ‘ஜனநாயகன்’ படம் வெளியாக உள்ளதால், படக்குழு அடுத்தடுத்த அப்டேட்களை அளித்து வருகிறது. ஏற்கெனவே படத்தின் 2 பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ள நிலையில், 3-வது பாடல் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் 2 பாடல்களும் மாஸ் சாங் ஆக இருந்த நிலையில், ‘செல்ல மகளே’ என்ற இந்த பாடல், அனிருத் இசையில், விஜய் குரலில் வரும் ஒரு மெலடி பீட் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 25, 2025
‘கரப்பான் பூச்சி பால்’ தெரியுமா?

ஆட்டுப் பால், மாட்டுப் பால் தெரியும். ஆனால் கரப்பான் பூச்சி பால் தெரியுமா? ‘பசிபிக் பீட்டில்’ என்ற கரப்பான் பூச்சி சுரக்கும் புரத படிகங்கள், பசுவின் பாலை விட 4 மடங்கு சத்துக்கள் கொண்டவை என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஒரு கிளாஸ் பால் தயாரிக்க 400 கரப்பான் பூச்சிகள் தேவைப்படுவதால் இதை எடுப்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால் எதிர்காலத்தில் இது சூப்பர் ஃபுட் ஆகலாம் என கூறப்படுகிறது. நீங்க இத குடிப்பீங்களா?


