News June 22, 2024
நீட் தேர்வை ரத்து செய்யாதது ஏன்? அமைச்சர் விளக்கம்

நீட் தேர்வை ரத்து செய்தால் நேர்மையான முறையில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். நீட் வினாத்தாள் கசிவு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்களை மட்டுமே பாதித்துள்ளது என்ற அவர், நீட் தேர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றம் இறுதி முடிவை எடுக்கும் என்றார். நீட் முறைகேடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
Similar News
News November 16, 2025
நாளை வெளியே வராதீங்க: முதல் மாவட்டமாக அலர்ட்

நாளை, நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை வெளுத்து வாங்க வாய்ப்புள்ளதாக IMD எச்சரித்துள்ளது. குறிப்பாக, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், புதுச்சேரியில் நாளை, நாளை மறுநாள் கன முதல் அதி கனமழை பெய்யக்கூடும். எனவே, பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அம்மாநில அரசு எச்சரித்துள்ளது.
News November 16, 2025
Op.Sindoor எதற்கும் உதவவில்லை: ஃபரூக்

டாக்டர்கள் டெல்லி குண்டு வெடிப்பில் ஈடுபட்டது ஏன், அவர்கள் இந்த பாதையை தேர்ந்தெடுக்க யார் காரணம் என ஃபரூக் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து ஆய்வு செய்ய வேண்டும் என கூறிய அவர், சிந்தூர் ஆபரேஷனால் ஒரு பிரயோஜனமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். இதனால், நமது நாட்டு மக்கள் 18 பேர்தான் பலியானார்கள் எனவும், எல்லை நாடுகளுடன் சமாதான பேச்சு நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
News November 16, 2025
கறார் காட்டும் அஜித்.. AK 64 தயாரிப்பில் சிக்கல்!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘AK 64’ படத்திற்கு, அஜித்குமார் ₹185 கோடி சம்பளம் கேட்கிறாராம். படத்தின் பட்ஜெட் ₹300 கோடி என்பதால், அஜித்தின் சம்பளம், பட தயாரிப்பு பணியை பாதிக்கும் என கருதி ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் விலகியுள்ளதாம். அதேபோல், கோல்ட் மைன்ஸ், AGS நிறுவனங்களும் இந்த முதலீட்டை கொண்டு லாபம் ஈட்ட முடியாது என கருதி பின்வாங்கி விட்டனவாம். இதனால் இப்படத்தை தயாரிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.


