News April 24, 2024
வாக்குப் பதிவு குறைந்தது பற்றிப் பேசாதது ஏன்?

எதற்கெடுத்தாலும் குரல் கொடுக்கும் திராவிடக் கட்சிகள், தமிழகத்தில் வாக்குப் பதிவு குறைந்தது பற்றிப் பேசாதது ஏன்? எனத் தமிழிசை வினவியுள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 69.72% வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த நிலையில், வாக்குப்பதிவு குறைந்ததற்கு தேர்தல் ஆணையமே காரணம் எனக் கூறிய அவர், வாக்குப்பதிவு சதவீதத்தில் ஏற்பட்ட குழப்பம் குறித்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்றார்.
Similar News
News August 23, 2025
வந்தா CM தானா? விஜய்யை சீண்டிய செல்லூர் ராஜு

தமிழகத்துக்கு ஒரு MGR மட்டும் தான் என செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். MGR-யை அனைவரும் கொண்டாடலாம், ஆனால் மக்களை பொறுத்தவரை MGR கட்சி என்றால் அது அதிமுக தான் என்றார். அண்ணாவிடம் பல வருடங்கள் அரசியல் பாடம் படித்த பின் தான் MGR அரசியலுக்கு வந்தார். ஆனால் காதல் பட நகைச்சுவை காட்சி போல் வந்தால் CM-ஆக தான் வருவேன் என விஜய் செயல்படுவதாக விமர்சித்தார்.
News August 23, 2025
ஆகஸ்ட் 23: வரலாற்றில் இன்று

*1956 – திரைப்பட நடிகர் மோகன் பிறந்த தினம்.
*2011 – லிபியா உள்நாட்டுப் போர்: அதிபர் கடாஃபி அப்பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
*1991 – உலகின் முதல் இணையதளம்(WWW) பொதுமக்களுக்காக திறந்து விடப்பட்டது.
*2023 – சந்திரயான்-3 நிலவின் தென்துருவத்தில் பிரக்யான் ரோவர் உதவியுடன் தரையிறங்கியது.
*அடிமைகள் ஒழிப்பு மற்றும் அதன் வணிகத்தையும் நினைவூட்டும் பன்னாட்டு நாள்.
News August 23, 2025
RSS-யிடம் விஜய் பாடம் படிக்க வேண்டும்: அர்ஜுன் சம்பத்

ஒழுக்கமாக மாநாடு நடத்துவது குறித்து இந்து, RSS அமைப்புகளிடமும் விஜய் கற்றுக் கொள்ள வேண்டும் என அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். TVK-ன் 2-வது மாநாடு டாஸ்மாக் கடைகளில் நடைபெற்ற மாநாடு போல் இருந்ததாகவும் விமர்சித்தார். மேலும், வரும் தேர்தலில் 3 சதவீத வாக்குகளை மட்டுமே தவெக பெறும் என்றும், மநீம., போல் விரைவில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் எனவும் தெரிவித்தார்.