News April 3, 2024
கச்சத்தீவு விவகாரத்தில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

கச்சத்தீவு விவகாரம் குறித்து பிரதமரிடம் கூறி முதலிலேயே ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என அண்ணாமலைக்கு செல்லூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார். “தன்னை எல்லாம் தெரிந்தவர் என்று சொல்லும் அண்ணாமலை, கச்சத்தீவு பற்றி எப்படி படிக்காமல் இருந்தார்?. தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி எப்படி தெரியாமல் போனது? இதற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் தேவையா? என சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
Similar News
News January 22, 2026
SBI வங்கி அக்கவுண்ட் இருந்தால் ₹2 லட்சமா?

எஸ்பிஐ வங்கியில் வாடிக்கையாளர்களுக்கு ₹2 லட்சம் பணம் தரப்படுவதாக ஒரு தகவல் ஷேர் செய்யப்படுகிறது. உண்மையில் இது சில கஸ்டமர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் லோன் ஆஃபராம். இதற்கு SBI வாடிக்கையாளர் என்பதை தவிர, Salary account-ம், மாத வருமானம் குறைந்தது ₹15,000-ம் இருக்க வேண்டும். CIBIL ஸ்கோர் 650 அல்லது 700க்கு மேல் இருந்தால், இந்த லோனுக்கு அப்ளை செய்யலாம். மேலதிக தகவலுக்கு வங்கியை அணுகவும்.
News January 22, 2026
தவெகவுக்கு சின்னம் கிடைத்தும் விஜய்க்கு சிக்கல்

<<18924405>>தவெகவுக்கு விசில்<<>> சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அது <<18925499>>உலக அளவில் டிரெண்டாகியுள்ளது<<>>. விசில், பொதுச் சின்னமாக ஒதுக்கப்பட்டாலும் தவெக போட்டியிடாத தொகுதிகளில் அது வேறு யாருக்கேனும் ஒதுக்கப்படும் என ECI அறிவித்துள்ளது. இதனால், தனித்து போட்டியிட்டால் 234 தொகுதியிலும் விசில் சின்னத்தை பெற முடியும். ஒருவேளை கூட்டணி கட்சிகள் அவர்களது சின்னத்தில் போட்டியிட்டால் அங்கு விசில், சுயேட்சைக்கு சென்றுவிடும்.
News January 22, 2026
டி20 உலகக் கோப்பையை புறக்கணித்த வங்கதேசம்

இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க மாட்டோம் என வங்கதேச கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. முன்னதாக, பாதுகாப்பு காரணங்களுக்காக வங்கதேச அணியின் போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வைத்த கோரிக்கையை ஏற்க ஐசிசி மறுத்துவிட்டது. இதனால், குரூப் சி-யில் வங்கதேசத்திற்கு பதிலாக ஸ்காட்லாந்து இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


