News April 24, 2024
குடியுரிமைக்கு மதத்தை அடிப்படையாக வைத்தது ஏன்?

எந்த நாடும் குடியுரிமைக்கு மதத்தை அடிப்படை தகுதியாக மாற்றவில்லை என பினராயி விஜயன் பாஜகவை விமர்சித்துள்ளார். குடியுரிமையை தீர்மானிப்பதற்கான அடிப்படை தகுதியாக மதத்தை பாஜக முன் வைக்கிறது. இதனால் மதச்சார்பற்ற விழுமியங்கள் அழிக்கப்படுகிறது. உலகில் எந்த நாடும் அகதிகளை அவர்களின் மதத்தின் அடிப்படையில் பிரிப்பதில்லை என்ற அவர், பாஜகவின் செயல்களுக்கு காங்கிரஸ் துணைப் போகிறது என்றார்.
Similar News
News January 19, 2026
BIG NEWS: விஜய் மீது CBI வழக்கு.. டெல்லியில் பரபரப்பு

கரூரில் 41 பேர் பலியான வழக்கின் குற்றப்பத்திரிகையில் விஜய்யின் பெயரை சேர்க்க CBI திட்டமிட்டுள்ளதாம். 2 நாள்கள் விஜய்யிடம் நடத்தப்பட்ட விசாரணைக்கு பிறகு இந்த முடிவுக்கு அதிகாரிகள் வந்துள்ளதாகவும், தேர்தலுக்கு முன்னர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. கரூர் காவல் நிலைய FIR-ல் புஸ்ஸி ஆனந்த், CTR நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா, மதியழகன் ஆகியோர் பெயர்கள் உள்ளன.
News January 19, 2026
அதிமுகவில் சசிகலா? இன்று முக்கிய அறிவிப்பா?

அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை என EPS கூறினாலும், அதிமுகவை ஒருங்கிணைப்பேன் என சசிகலா சொல்லி வருகிறார். இந்நிலையில், இன்று தனது ஆதரவாளர்களுடன் அவர் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று கள்ளக்குறிச்சி அரசூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் சசிகலா அவரது நிலைப்பாட்டை அறிவிக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், இதனால் திருப்பம் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு தொண்டர்களிடையே எழுந்துள்ளது.
News January 19, 2026
கண்கள் அடிக்கடி அரிக்கிறதா? இத கவனிங்க!

காலநிலை மாற்றம், தொற்று கிருமிகளால் கண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றன. இதனால் ஏற்படும் அரிப்பு, எரிச்சலை தடுக்க சில இயற்கை டிப்ஸ்: *ஐஸ் கட்டிகளை துணியில் வைத்து கண்கள் மீது ஒத்தடம் கொடுக்கலாம். *பாலை துணியில் நனைத்து கண்களை துடைத்து வரலாம் *வெள்ளரிக்காய் துண்டுகளை கண்கள் மீது வைக்கலாம் *வெந்நீரில் உப்பு கலந்து, துணியில் நனைத்து கண்கள் மீது வைக்கலாம் *தொற்று அதிகம் இருந்தால் டாக்டரை அணுகுங்கள்.


