News December 29, 2024
பொங்கல் தொகுப்பில் ரூ.1,000 ஏன் இல்லை? அரசு விளக்கம்

பொங்கல் தொகுப்பில் ரொக்கப் பணம் வழங்குவது தொடர்பாக அரசு அறிவிக்கவில்லை. இதனால் ரூ.1,000 ரொக்கத்தை எதிர்பார்த்திருந்த மக்கள் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ரூ.1,000 வழங்கப்படாதது ஏன் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமளித்துள்ளார். மிகப்பெரிய இயற்கை பேரிடரை மாநிலம் சந்தித்ததால், சொந்த நிதியிலிருந்து ரூ.2,028 கோடி செலவிட நேர்ந்ததால் நிதியில்லை எனக் கூறியுள்ளார்.
Similar News
News March 12, 2026
வீட்டு கேஸ் சிலிண்டர் சப்ளை.. IOCL முக்கிய அறிவிப்பு!

வீட்டு உபயோக சிலிண்டர் தட்டுப்பாடு என தகவல் பரவிவரும் நிலையில், மக்கள் அவசர அவசரமாக கேஸுக்கு முன்பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து IOCL முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மக்கள் பதற்றம் அடைந்து கியாஸ் புக்கிங் செய்யத் தேவையில்லை எனவும், அனைவரின் நேர்மையான கோரிக்கையும் பூர்த்தி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது. அத்துடன் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் கூறியுள்ளது.
News March 12, 2026
இலவசமாக வேலைக்கு ஆட்கள் எடுக்க சூப்பர் வாய்ப்பு!

‘ஆட்கள் தேவை’ என போர்டு வைத்தும் உங்கள் கடை அல்லது நிறுவனத்திற்கு பணியாளர்கள் கிடைப்பதில் சிரமமாக உள்ளதா? இனி கவலை வேண்டாம். எவ்வித கட்டணமுமின்றி WAY2NEWS உங்களுக்காக விளம்பரம் செய்கிறது. சிறு, குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர், வணிகர்கள் தங்களுக்கு தேவையான விளம்பரத்தை <
News March 12, 2026
TN-ல் பெண்களுக்கு பாதுகாப்பு எங்கே? விஜய் ஆவேசம்

தங்கள் கல்லாப்பெட்டி, கூட்டணியைத் தக்க வைப்பதில் மட்டுமே முழு கவனம் செலுத்தும் முதல்வரே, TN-ல் பெண்களுக்கு பாதுகாப்பு எங்கே என விஜய் கேள்வி எழுப்பியுள்ளார். தூத்துக்குடியில் பள்ளி மாணவி வன்கொடுமை செய்யப்பட்டு உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்ட செய்தி நெஞ்சை பதற வைப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், இப்படி ஒரு ஆட்சி தேவையா? என மக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கிவிட்டதாக தனது X தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.


