News August 10, 2024
சாப்பிட்டதும் வயிறு உப்புசமாவது ஏன்?

சாப்பிட்டதும் வயிறு உப்புசம் பிரச்னை ஏன் வருகிறது என மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். ராஜ்மா, கொண்டைக்கடலை மாதிரியான கடலைகள், பால் போன்றவை வயிற்று உப்புசத்தை ஏற்படுத்தும் என்று அவர்கள் கூறுகின்றனர். மேலும், மலச்சிக்கல் உள்ளவர்களுக்கும் உப்புசம் அதிகமிருக்கும், புளித்த ஏப்பம், நெஞ்செரிச்சல் வரக்கூடும் என தெரிவிக்கின்றனர். எனவே உணவு முறையை மாற்றி தீர்வு காண பரிந்துரைக்கின்றனர்.
Similar News
News November 2, 2025
காந்திக்கு பிறகு மோடி தான்: RN ரவி

காந்திக்கு பின் இந்த நாட்டை புரிந்துகொண்ட ஒரே நபர் PM மோடி தான் என்று கவர்னர் RN ரவி கூறியுள்ளார். மோடியின் ஆட்சியில் வடகிழக்கு மாநிலங்கள் அமைதியாக உள்ளதாகவும், 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளதாகவும் ரவி தெரிவித்துள்ளார். குறிப்பாக, மாவோயிஸ்ட்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். மோடி ஆட்சிக்கு வரும் நேரத்தில், நாடு பின்தங்கி இருந்ததாகவும் கூறினார். உங்கள் கருத்து என்ன?
News November 2, 2025
நவம்பர் 2: வரலாற்றில் இன்று

*1834 – முதன்முதலாக இந்தியாவில் இருந்து 75 ஒப்பந்த தொழிலாளர்கள் மொரீஷியஸ் சென்றனர்
*1903 – பரிதிமாற்கலைஞர் நினைவுநாள்.
*1936 – BBC நிறுவனம், தொலைக்காட்சி சேவையை தொடங்கியது.
*1965 – ஷாருக்கான் பிறந்தநாள்.
*1995 – நிவேதா தாமஸ் பிறந்தநாள்.
News November 2, 2025
காஞ்சனா 4-ல் இணைந்த பூஜா ஹெக்டே, நோரா ஃபடேஹி

காமெடி கலந்த ஹாரர் படங்களின் வரிசையில், ‘காஞ்சனா’ படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இந்த படத்தின் 4-ம் பாகம் உருவாகி வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் நடிகைகள் பூஜா ஹெக்டே, நோரா ஃபடேஹி ஆகிய இருவரும் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக நடித்துள்ளது. படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வரும் நிலையில், 2026 கோடை விடுமுறையில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


