News July 9, 2024
தேநீர் ஏன் விலை உயர்ந்து வருகிறது? (1/2)

உழைக்கும் இந்திய மக்களின் அன்றாட வாழ்வில் பிரிக்க முடியாத அங்கமாக தேநீர் கருதப்படுகிறது. இந்நிலையில், அதன் மூலப் பொருளான தேயிலை விலை (கிலோ ₹217) தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருப்பதால், அதன் விளைவாக தேநீர் விலையும் உயர்ந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக தேயிலை உற்பத்தி பாதிப்பு கூறப்படுகிறது. அஸ்ஸாம் போன்ற இடங்களில் தேயிலை உற்பத்தி குறைந்ததாலும், அதன் தேவை அதிகரித்ததாலும் விலை உயர்ந்துள்ளது.
Similar News
News September 24, 2025
IND Vs PAK மீண்டும் மோதலா?

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று புள்ளி பட்டியலில் இந்திய அணி ஒரு வெற்றி, 0.689 ரன் ரேட்டுடன் முதல் இடத்தில் உள்ளது. 2 தோல்வியை தழுவிய இலங்கை ஏறக்குறைய தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. பாகிஸ்தான், வங்கதேசம் தலா 2 புள்ளிகளுடன் 2-வது, 3-வது இடங்களில் உள்ளன. இன்றைய போட்டியில் வென்றால் இந்தியா பைனலுக்கு முன்னேறிவிடும். எனவே, பாக். தனது கடைசி ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தினால், பைனலில் IND Vs PAK மோதும்.
News September 24, 2025
வயிறு உப்புசத்திற்கு எளிதில் தீர்வு!

சாப்பிட்ட பிறகு வயிறு பலூன் போல் ஊதியிருந்தால் அது வயிறு உப்புசம் பிரச்னையாகும். செரிமானம் ஆகாத உணவு, காற்று சேர்வதால் வயிறு உப்பித் தெரியும். இதற்கு 10 பல் பூண்டுடன், கொஞ்சம் கல் உப்பை இடித்து சேர்த்து, மிளகுத்தூள் போட்டு நல்லெண்ணெய்யில் வதக்கி, 15 நிமிடத்திற்கு ஒவ்வொன்றாக சாப்பிட்டு தண்ணீர் குடித்து வந்தால், காற்று நீங்கி வயிறு இயல்பு நிலைக்கு திரும்பும். தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க..
News September 24, 2025
செங்கோட்டையன் விரும்பினால் சந்திப்பேன்: OPS

செங்கோட்டையன் விரும்பினால் அவரை சந்திப்பேன் என OPS கூறியுள்ளார். மேலும், NDA கூட்டணியில், CM வேட்பாளராக EPS-ஐ ஏற்க முடியாது என்ற TTV தினகரனின் கருத்தை வரவேற்பதாகவும் OPS தெரிவித்துள்ளார். இது, மீண்டும் NDA கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?