News October 9, 2025
மேம்பாலத்திற்கு சாதிப் பெயர் ஏன்? சீமான்

கோவையில் திறக்கப்பட்ட மேம்பாலத்துக்கு ஜிடி நாயுடுவின் பெயர் வைக்கப்பட்டதற்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். எதிலும் சாதிப்பெயர்கள் இருக்கக்கூடாது என்று பேசிய திமுக, ஜி.டி.நாயுடு என்ற சாதிப்பெயரைச் சூட்டுவது ஏன் என கேள்வியெழுப்பியுள்ளார். மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயரை நீக்கிவிட்டு, கொங்கு மக்களின் பெருமைகளாகத் திகழும் தீரன் சின்னமலை போன்றவர்களின் பெயரை வைக்க வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News October 10, 2025
NDA கூட்டணியில் தவெக? அண்ணாமலை திட்டவட்டம்

கூட்டணிக்கு பிள்ளையார்சுழி போடப்பட்டு விட்டதாக EPS கூறிய நிலையில், NDA கூட்டணியில் தவெக இணையுமா என அண்ணாமலையிடம் கேட்கப்பட்டது. 2 கட்சிகளின் சித்தாந்தங்களும் வேறு வேறு பாதையில் உள்ளபோது, எப்படி ஒரே நேர்கோட்டில் பயணிக்க முடியும் என்று கேள்வியெழுப்பியுள்ளார். அதேநேரம், தேர்தலுக்கு காலம் உள்ளதால், பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் அண்ணாமலை சஸ்பென்ஸ் வைத்துள்ளார். NDA கூட்டணியில் தவெக இணையுமா?
News October 10, 2025
நாராயணா நாராயணா அப்டினு சொல்லுங்க.. ரஜினிகாந்த்

‘ஜெயிலர் 2’ ஷூட்டிங்கிற்கு இடையில் இமயமலை பயணம் மேற்கொண்டுள்ளார் ரஜினிகாந்த். அங்கு பத்ரிநாத் கோயிலுக்கு சென்றபோது அவரை சூழ்ந்த பக்தர்கள், ‘ரஜினி சாபு ரஜினி சாபு’ என அன்போடு அழைத்துள்ளனர். இதனை ஏற்க மறுத்த ரஜினி, ‘என் பெயரை சொல்லாதீங்க, நாராயணா நாராயணா என்று சுவாமி நாமத்தை சொல்லுங்கள்’ என கூறியதாக அவரது நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த செய்தி தற்போது வைரலாகிறது.
News October 10, 2025
ராசி பலன்கள் (10.10.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க