News February 12, 2025
அமைச்சராவதில் SB-க்கு ஏன் இந்த அவசரம்? SC கேள்வி

ஜாமின் கிடைத்தவுடனே அமைச்சராக பொறுப்பேற்றது ஏன் என்று அவர் தரப்பிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அவர் மீண்டும் அமைச்சரானதை எதிர்த்து வித்யா குமார் என்பர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த வழக்கில் அரசு ஊழியர்கள் சாட்சியங்களாக இருக்கும் போது அமைச்சராக தொடர்வது தார்மீகமா? அமைச்சராக தொடர SB விரும்புகிறாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.
Similar News
News September 10, 2025
இது தெரிந்தால் நீங்களும் தற்கொலையை தடுக்கலாம்

தற்கொலை எண்ணத்தில் இருப்பவரை காப்பாற்ற முதலில் இந்த அறிகுறிகள் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். ➤தற்கொலை எண்ணம் கொண்டவர்கள் காரணமே இல்லாமல் சிரிப்பர் ➤சரியாக தூங்கவோ, சாப்பிடவோ மாட்டார்கள் ➤நாள்பட்ட மன அழுத்தம் ➤உடைமைகளை கொடுத்துவிடுவர் ➤அதீத மதுபழக்கம் ➤தனிமையில் இருப்பர் ➤எதன் மீதும் ஈடுபாடு இருக்காது. இப்படி யாரேனும் உங்களுக்கு தெரிந்தால் அவருக்கு ஆறுதலாக இருங்கள். SHARE.
News September 10, 2025
வண்ணத்து பூச்சியாய் மின்னும் நடிப்பு ‘அரக்கி’

‘வயசானலும் அழகும் ஸ்டைலும் குறையவில்லை’ என்ற நீலாம்பரியின் டயலாக்கிற்கு பொருத்தமானவர் மஞ்சு வாரியர். மலையாளத்தின் முன்னணி நடிகையான மஞ்சு, தமிழில் தனுஷ் அஜித், ரஜினி, VJS உள்ளிட்டோருடன் நடித்து தமிழிலும் ஒரு கலக்கு கலக்கியுள்ளார். சினிமாவால் கொண்டாடப்படும் அவர், தனது 47-வது பிறந்தநாளையொட்டி, வெளிநாட்டில் வலம் வரும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். போட்டோவை பார்த்து எந்த நாடுன்னு சொல்லுங்க.
News September 10, 2025
தமிழக பள்ளிகளில் PUBLIC EXAM இந்த ஆண்டு முதல் ரத்து

மாநில கல்விக் கொள்கையில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக, கல்வி வாரிய கூட்டம் நடைபெற்றது. அதில், இந்தாண்டு முதல் 11-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வை ரத்து செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அரசின் அறிவிப்பை அமல்படுத்த அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 10, +2 மாணவர்களுக்கு வழக்கம்போல் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.