News October 23, 2024
காவி வண்ணம் அடிப்பது ஏன்? தமிமுன் அன்சாரி

அரசியல் களத்தில் தடுமாறுவதால் நிறத்தை வைத்து பாஜக அரசியல் செய்வதாக தமிமுன் அன்சாரி குற்றஞ்சாட்டியுள்ளார். BSNL நிறுவனத்தின் அடையாள சின்னத்தை காவி நிறத்திற்கு மாற்றியது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். I.N.D.I.A கூட்டணி எழுச்சியுறுவதால் Connecting India என்ற வாசகம், Connecting Bharat என மாற்றப்பட்டுள்ளதாகவும், பாஜகவின் இந்த போக்கு கடும் கண்டனத்திற்குரியது என்றும் அவர் சாடியுள்ளார்.
Similar News
News November 27, 2025
நீலகிரி: இந்த பகுதிகளில் மின்தடை அறிவிப்பு!

நீலகிரி மாவட்டம் கட்டபெட்டு துணை மின் நிலையத்தில் (1/12/25)-ம் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் கட்டபெட்டு துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட ஓரசோலை, கக்குச்சி, திருசசிக்கடி,
தும்மனட்டி, இடுஹட்டி, பாக்கியா நகர், நடுஹட்டி, கூக்கல், தூனேரி உள்ளிட்ட இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
News November 27, 2025
செங்கோட்டையனை தொடர்ந்து தங்கமணி விலகலா?

அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்படவிருக்கும் தீர்மானங்கள் குறித்து நேற்று ஆலோசனை செய்யப்பட்டது. இதில், வேலுமணி, சி.வி.சண்முகம், ஆர்.பி.உதயகுமார், ஓ.எஸ்.மணியன், ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆனால், EX மினிஸ்டர் தங்கமணி, இந்த ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்துள்ளாராம். இதனால், செங்கோட்டையனை போலவே, தங்கமணியும் அதிமுகவில் இருந்து விலக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் உண்மை தெரியவரும்.
News November 27, 2025
இன்னும் சற்றுநேரத்தில் விஜய்யுடன் இணைகிறார்

விஜய் முன்னிலையில், செங்கோட்டையன் தவெகவில் இணையவுள்ளதே இன்றைய ஹாட் டாபிக். மேலும், அவரது ஆதரவாளர்களான Ex MP சத்தியபாமா, அதிமுக முன்னாள் நிர்வாகிகள் கந்தவேல் முருகன், சுப்பிரமணியம், குறிஞ்சிநாதன், மௌடீஸ்வரன், பி.யூ.முத்துசாமி, எஸ்.எஸ்.ரமேஷ் உள்ளிட்டோரும் தவெகவில் இணையவுள்ளனராம். இது விஜய்க்கான கொங்கு அரசியலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.


