News February 13, 2025
ஜனாதிபதி ஆட்சி ஏன் கொண்டு வரப்படுகிறது?

ஒரு மாநிலத்தில் அசாதாரண சூழல் எழும் போது, ஜனாதிபதிக்கு ஆளுநர் அறிக்கை அளிப்பார். இதன் பேரில், பிரதமர் தலைமையிலான அமைச்சரவை பரிந்துரைக்கேற்ப 356(1) சட்டப்பிரிவின் கீழ் <<15453079>>ஜனாதிபதி ஆட்சி<<>> அமல்படுத்தப்படும். அதன்பிறகு, ஜனாதிபதியின் மேற்பார்வையில் ஆளுநர் ஆட்சி அதிகாரத்தில் இருப்பார். ஜனாதிபதி ஆட்சி 6 மாதம் அமலில் இருக்கும். தேவைப்பட்டால், நாடாளுமன்ற ஒப்புதலுடன் 3 ஆண்டுகளுக்கு ஜனாதிபதி ஆட்சி இருக்கும்.
Similar News
News September 11, 2025
EPS மீது சிலருக்கு வயிற்றெரிச்சல்: உதயகுமார்

கட்சி ஒற்றுமை என்ற பெயரில் அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் என சிலர் கனவு காண்பதாக ஆர்.பி.உதயகுமார் சாடினார். EPS-ன் சுற்றுப் பயணத்தை பொறுக்க முடியாமல் சிலருக்கு வயிற்று எரிச்சல் ஏற்பட்டு இருப்பதாகவும், இப்படிப்பட்டவர்களுக்கு தோல்விதான் பரிசாக கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், 2026ல் EPS தலைமையில் அம்மாவின் ஆட்சி அமைவது உறுதி எனவும் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
News September 11, 2025
மசோதா வழக்கு.. மத்திய அரசுக்கு SC கேள்வி

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பான வழக்கில் கவர்னர்கள் பதவி பிரமாணத்துக்கு உண்மையாக இருக்க வேண்டும் என மத்திய அரசு SC-ல் வாதிட்டது. சில நேரங்களில் மசோதாக்கள் குறித்து மறுபரிசீலனை செய்ய கவர்னருக்கு உரிமை இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு SC கூட்டாட்சி முறையில் கலந்து பேசும் அம்சம் இருக்கையில், மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் இருப்பதை ஏற்க முடியுமா என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியது.
News September 11, 2025
வெண்மேகமே பெண்ணாக உருவான மீனாட்சி சவுத்ரி

மீனாட்சி சவுத்ரியின் சமீபத்திய இன்ஸ்டா புகைப்படங்களை பார்த்து வெண்மேகம் பெண்ணாக உருவானதோ பாடலை ரசிகர்கள் ரிபீட் மோடில் உருகி உருகி பாடி வருகின்றனர். அவரிடம் மனதை பறிகொடுத்த ரசிகர்கள் இவ்வருடம் உலக அழகி போட்டியெல்லாம் நடத்த தேவையில்லை என்கின்றனர். இதுவரை 2 தமிழ் படங்களில் மட்டுமே மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார். இனி அவர், அதிக தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் வேண்டுகோள்.