News October 24, 2024
ஆபாச படம் ஏன் Blue Film என அழைக்கப்படுகிறது?

ஆரம்ப காலங்களில் ஆபாச படங்களை தயாரிப்பதும், வெளியிடுவதும் மிகவும் சவாலானதாக இருந்தது. அதேபோல் தொடக்க காலத்தில் படங்களின் தரம் மிக மோசமாக இருந்தது. அதன் காரணமாக, நீல நிறத்தில் தான் படக் காட்சிகள் பார்வையாளர்களுக்கு தெரிந்தது. மேலும், ஆபாச பட கேசட்களை விற்பனை செய்தவர்கள் நீலநிற கவர்களில் வைத்து கொடுத்தனர். இப்படியாக பல காரணங்களால் ஆபாச படங்கள் Blue Films என அழைக்கப்பட்டன.
Similar News
News January 19, 2026
அதிமுகவில் மீண்டும் OPS? செல்லூர் ராஜு கொடுத்த அப்டேட்

தொகுதி மாறப்போவதாக வரும் தகவல் வதந்தி எனக் கூறிய செல்லூர் ராஜு, மதுரை மேற்கு தொகுதியிலேயே போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளார். மதுரையில் பேட்டியளித்த அவர், கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் சேர்க்க பாஜக முயற்சி எடுப்பதாகவும், அதில் தவறில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், OPS, TTV இணைப்பை பற்றி EPS தான் முடிவெடுப்பார் என்றும் அவர் கூறியுள்ளார்.
News January 19, 2026
கழிவறையில் பெண் போலீஸை வீடியோ எடுத்த SI சிக்கினார்

வேலியே பயிரை மேய்ந்த கதையாக பெண் காவலர்களின் கழிவறையில் செல்போன் வைத்து வீடியோ எடுத்த SI கைது செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், நேற்று முன்தினம் CM ஸ்டாலினின் பாதுகாப்பிற்காக சென்ற பெண் காவலர்களுக்கு இந்த அவலநிலை ஏற்பட்டுள்ளது. விசாரணைக்கு பிறகு கைது செய்யப்பட்ட பரமக்குடி SI முத்துப்பாண்டி, தற்போது ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். காக்க வேண்டிய போலீஸே இப்படியா?
News January 19, 2026
எதிர்ப்பையும் மீறி CM ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!

திருப்போரூரில் ₹342.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள மாமல்லன் நீர்தேக்கத்திற்கு CM அடிக்கல் நாட்டினார். சுமார் 4,376 ஏக்கர் பரப்பளவில் ஆண்டுக்கு 2.25 டிஎம்சி வெள்ளநீரை சேமிக்கும் வகையில் இது அமைய உள்ளது. இந்த நீர்தேக்கத்தால், தங்களின் மீன்பிடித்தொழில் பாதிக்கப்படும் என்ற அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை டிடிவி தினகரன் சுட்டிக்காட்டியிருந்த நிலையில், CM இன்று அடிக்கல் நாட்டியுள்ளார்.


