News March 4, 2025
தமிழகம் மீது மொழித் திணிப்பு ஏன்? முதல்வர் கேள்வி

இருமொழிக் கொள்கை குறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெளிவாக விளக்கி உள்ளதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்கும் நிலையில், மொழித் திணிப்பு ஏன்?, மும்மொழிக் கொள்கையால் கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலம் ஏதாவது ஒன்றை கூற முடியுமா? என கேள்வி எழுப்பிய அவர், ஏகாதிபத்திய மனோபாவம் கொண்ட சிலரது வசதிக்காக தமிழ்நாட்டின் மீதான மொழித் திணைப்பை ஏற்கமாட்டோம் என கூறியுள்ளார்.
Similar News
News March 4, 2025
நாட்டின் சிறந்த சிற்பக் கலைஞர் காலமானார்

நாட்டின் மிகச்சிறந்த சிற்ப, ஓவியக் கலைஞரான ஹிம்மத் ஷா (92) ஜெய்ப்பூரில் காலமானார். வெகுஜனப் பரப்பில் அறியப்படாமல் இருப்பினும், இந்திய நவீன கலை உலகில் இவருக்கு தனிச் சிறப்பு உண்டு. கல், களிமண், காகிதம் என கையில் கிடைக்கும் எதையும் உயிர்ப்புள்ள கலைப் படைப்பாக மாற்றும் திறன் கொண்டவர் இவர். பல்வேறு உயரிய விருதுகள் பெற்றவர். இவரின் வெள்ளி இலை, தாமிர தலைகள் மற்றும் டெரகோட்டா சிற்பங்கள் புகழ்பெற்றவை.
News March 4, 2025
ஜெர்மனியில் நர்ஸ் வேலை: ரூ. 2 லட்சம் சம்பளம்!

ஜெர்மனியில் நர்ஸாக பணிபுரிய 6 மாத அனுபவம் பெற்ற 35 வயதுக்குட்பட்ட டிப்ளமோ மற்றும் பட்டதாரிகளுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இவர்களுக்கு ஜெர்மன் பயிற்றுவிக்கப்பட்டு ரூ.2 லட்சம் சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் omclgerman2022@gmail.com-இல் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு www.omcmanpower.tn.gov.in அல்லது 044-22505886 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். மார்ச் 15 கடைசி தேதி.
News March 4, 2025
என்னது.. நம்ம ஊர்ல தங்கமா..!

அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இருந்தே, அதிக அளவில் தங்கம் எடுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தமிழத்திலும் தங்கம் கிடைக்க சாத்தியம் உள்ளதாக இந்திய புவியியல் ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை, விருதுநகர், ராஜபாளையம் ஆகிய பகுதிகளில் பூமிக்கு அடியில் தங்கம் இருக்க சாத்தியக் கூறு இருப்பதாக அவர் கூறியுள்ளார். ஒருவேளை, நம்ம ஊரிலேயே தங்கம் கிடைத்தாலாவது விலை குறையுமா?