News April 10, 2025
ஊக்க ஊதியம் ஏன் வழங்கப்படுகிறது?

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பல்வேறு சலுகைகளை மாநில அரசு வழங்கி வருகிறது. அதில் ஒன்று கல்வித் தகுதிக்கு ஏற்ப ஊக்க ஊதியம் வழங்கும் முறை. அதாவது அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு குறிப்பிட்ட தகுதி நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும். அதற்கு அதிகமாக படித்திருந்தால் அவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்கப்படும். இளங்கலை, முதுகலை, கல்வியியல் என ஒவ்வொரு படிப்பிற்கு ஏற்ப ஊக்க ஊதியம் நிர்ணயம் செய்யப்படும்.
Similar News
News January 1, 2026
SKY உடன் ரிலேசன்ஷிப்பில் இல்லை: நடிகை

சமீபத்தில் இந்திய டி20 கேப்டன் <<18713562>>SKY<<>> தனது மனைவியுடன் திருப்பதி சென்றிருந்த நிலையில், கடந்த காலங்களில் அவர் தனக்கு அடிக்கடி மெசேஜ் அனுப்பியதாக பாலிவுட் நடிகை குஷி முகர்ஜி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அவருடன் ரொமாண்டிக் ரிலேசன்ஷிப்பில் இல்லை, நட்பு ரீதியாகத்தான் பேசிக்கொண்டு இருந்ததாக நடிகை விளக்கம் அளித்துள்ளார். மேலும், அவருடன் பேசியே நீண்ட நாள்கள் ஆனதாகவும் தெரிவித்துள்ளார்.
News January 1, 2026
எல்லாரும் நல்லா இருப்போம்: விஜய்

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மக்களுக்கு விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது இன்ஸ்டாவில், ‘ஜனநாயகன்’ போஸ்டரை பகிர்ந்து நல்லா இருப்போம் எல்லாரும் நல்லா இருப்போம் என்றும் Happy New Year நண்பா நண்பி எனவும் விஜய் கூறியுள்ளார். அவருடைய பதிவிற்கு சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கில் லைக்ஸ் அள்ளியது. 2026-ம் ஆண்டு சிறப்பாக அமையட்டும் என ரசிகர்களும் அவருக்கு கமெண்ட்ஸ்-ல் வாழ்த்துகளை பகிர்ந்தனர்.
News January 1, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: வெருவந்தசெய்யாமை
▶குறள் எண்: 567
▶குறள்:
கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம்.
▶பொருள்: கடுமையான சொல்லும் முறைகடந்த தண்டனையும் அரசனுடைய வெற்றிக்கு காரணமான வலிமையைத் தேய்க்கும் அரம் ஆகும்.


