News March 23, 2025
திமுக புறமுதுகிட்டு ஓடுவது ஏன்? விஜய் கேள்வி

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் போராட்டம் குறித்து விஜய் காட்டமான அறிக்கையை வெளியிட்டுள்ளார். திமுக அரசின் கபட நாடகத்தால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்ட களத்தில் இருப்பதாக கூறிய அவர், அவர்களை நம்ப வைத்து ஏமாற்ற வேண்டாம் என விமர்சித்துள்ளார். மேலும், எல்லாவற்றுக்கும் முன்னோடி என மார்தட்டும் விளம்பர மாடல் திமுக அரசு, ஆசிரியர்களை பார்த்து புறமுதுகிட்டு ஓடுவது ஏன் என்றும் கேள்வியெழுப்பினார்.
Similar News
News March 25, 2025
BREAKING: சேனலை மூடுகிறார் சவுக்கு சங்கர்

தான் நடத்தும் ’சவுக்கு மீடியா’ யூடியூப் சேனலை மூடுவதாக சவுக்கு சங்கர் அறிவித்துள்ளார். இரு தினங்களுக்கு முன் அவரது வீட்டில் மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய நிலையில், இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். தாயின் உயிரை பணயம் வைத்து சேனல் நடத்த விருப்பமில்லை என்று கூறியுள்ள அவர், இது இந்த சமூகத்தின் தோல்வி என்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து உங்களது கருத்து என்ன?
News March 25, 2025
டெல்லிக்கு ₹1 லட்சம் கோடிக்கு பட்ஜெட்!

டெல்லியில் பாஜக ஆட்சி அமைந்த நிலையில், முதல் முறையாக அம்மாநில பேரவையில் CM ரேகா குப்தா நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். சுமார் ₹1 லட்சம் கோடிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய அவர், டெல்லியில் நீடித்திருந்த ஊழல் மற்றும் திறனற்ற சகாப்தம் இத்துடன் முடிவுக்கு வந்துவிட்டதாக கூறினார். கடந்த நிதியாண்டில் தாக்கல் செய்த பட்ஜெட்டை விட, இது 31.5% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
News March 25, 2025
கொடூர மனைவிகளுக்கு எதிராக ‘புருஷா கமிஷன்’ வருமா?

சமீபகாலமாக, குடும்ப பிரச்னைகளில் ஆண்களும் பாதிக்கப்படும் செய்திகள் வருகின்றன. ஆண்களை பாதுகாக்க யாருமே இல்லையா என்பவர்களுக்கு, ‘புருஷா கமிஷன்’ பற்றி தெரியுமா? கொடூரமான மனைவிகளிடம் இருந்து காக்க, 2018ல் ஆந்திர மகிளா கமிஷனின் தலைவி ராஜகுமாரி இக்கோரிக்கையை வைத்தார். ஆனால், மாதர் சங்கங்கள் இதை எதிர்க்க, கோரிக்கை கிடப்பில் போடப்பட்டது. இப்போது அந்த சங்கத்திற்கு உயிர் கொடுக்கலாமே! என்ன சொல்றீங்க?