News June 17, 2024
காதல் திருமணத்தில் சாதியை நுழைப்பது ஏன்? அப்பாவு

இருவரின் சம்மதத்தோடு காதல் திருமணம் யார் செய்து வைத்தாலும் அதில் தவறில்லை என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். காதல் திருமணத்தை எதிர்த்து வன்முறையில் ஈடுபடுவதை ஏற்க முடியாது என்ற அவர், காதல் திருமண விவகாரத்தை சாதிய ரீதியாக யாரும் கொண்டு செல்லக் கூடாது எனவும் வேண்டுகோள் விடுத்தார். முன்னதாக, காதல் திருமணம் செய்து வைத்ததால், நெல்லை மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தை பெண் வீட்டார் சூறையாடினர்.
Similar News
News March 23, 2026
ராதிகாவுக்கு கிஸ் கொடுத்த நயன்தாரா

திரையுலகில் 1978-ல் வெளியான ‘கிழக்கே போகும் ரயில்’ படம் மூலம் அறிமுகமானவர் ராதிகா. முதல் படத்திலேயே முத்திரை பதித்த ராதிகா, சமீபத்தில் ரிலீசான ‘தாய் கிழவி’ வரை நடிப்பு அரக்கியாக வலம் வருகிறார். இந்நிலையில் திரையுலகில் 49 வருடங்களை அவர் நிறைவு செய்ததை, கவின் நடிக்கும் ‘ஹாய்’ படக்குழு கேக் வெட்டி கொண்டாடியது. அப்போது ராதிகாவுக்கு நயன்தாரா முத்தம் கொடுத்து வாழ்த்திய போட்டோ SM-ல் வைரலாகி வருகிறது.
News March 23, 2026
பாமக கடந்து வந்த பாதை.. இதுதான் ரொம்ப குறைவாம்!

1991 முதல் சட்டப்பேரவை தேர்தலில் களம் காணும் பாமக, முதல்முறையாக 20 தொகுதிகளுக்கும் குறைவாக போட்டியிடவுள்ளது. சட்டப்பேரவை தேர்தல்களில் பாமக கடந்து வந்த பாதை; 1991 – 194 (தனி அணி), 1996 – 116 (தனி அணி), 2001 – 27( அதிமுக+), 2006 – 31 (திமுக+), 2011 – 30(திமுக+), 2016- 234(தனி அணி), 2021 – 23(அதிமுக+), 2026 – 18(அதிமுக+). மறுபுறம் பாமகவுக்கு உரிமை கோரும் ராமதாஸ், அஇபுதமமுக உடன் கூட்டணி வைத்துள்ளார்.
News March 23, 2026
FLASH: விலை ₹30,000 குறைந்தது.. இன்ப அதிர்ச்சி

<<19458440>>தங்கத்தை<<>> போன்று வெள்ளி விலையும் காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக ஏற்றம் கண்டுள்ளது. ஆனால், கடந்த 10 நாள்களில் வெள்ளி விலை கிலோவுக்கு ₹30,000 குறைந்திருப்பது சற்று ஆறுதலாக அமைந்துள்ளது. மார்ச் 14-ல் ₹2.8 லட்சத்திற்கு விற்பனையான ஒரு கிலோ வெள்ளி, தற்போது ₹2.5 லட்சத்திற்கு விற்கப்பட்டு வருகிறது. அதேநேரம், போர் நிறுத்தம் காரணமாக வரும் நாள்களில் விலையேற்றம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. SHARE


