News July 5, 2025

மகாபாரத கதையை மட்டும் ஏன் யாரும் எடுக்க மாட்றாங்க?

image

பல தசாப்தங்களாக தொடர்ந்து படமாக்கப்பட்டாலும், தற்போதும் ‘ராமாயணம்’ ₹835 கோடி செலவில் தயாராகி வருகிறது. ஆனால், ஏன் மகாபாரதம் கதையை படமாக எடுக்க யாரும் முன்வரவில்லை என்ற கேள்வி எழுகிறது. ராஜமெளலி, ஆமிர் கான் போன்றோர் மகாபாரதம் தங்களது கனவு படம் என்றாலும், அந்த படத்திற்கான வேலைகள் எதுவும் நடக்கவில்லை. எண்ணற்ற கதாபாத்திரங்களும், அதிக பொருட்செலவும் ஆகும் என்பதால் விட்டுவிடுகிறார்களா?

Similar News

News July 5, 2025

பெருங்கவிக்கோ உடலுக்கு காவல்துறை மரியாதை..!

image

மூத்த தமிழறிஞர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் (91) உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நெஞ்சத்தோட்டம், ஐயப்பன் பாமாலை உள்ளிட்ட நூல்கள், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கவிதைகளை பதிப்பித்த அவர், கலைமாமணி விருது, திருவள்ளுவர் விருது உள்ளிட்டவற்றை பெற்றுள்ளார். அவரது உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

News July 5, 2025

அஜித் மரணம்: போராட்டத்தின் தேதியை மாற்றிய தவெக

image

அஜித்குமார் மரணத்தை கண்டித்து தவெக வரும் 12-ம் தேதி போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே 6-ம் தேதி போராட்டம் நடத்த தவெக திட்டமிட்டிருந்தது ஆனால் காவல்துறை அனுமதி தர மறுத்துவிட்டது. இதுதொடர்பாக நீதிமன்றத்தை அவர்கள் நாடிய போது, தவெக ஏன் போராட்டத்திற்கு அவரசப்படுகிறது என நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. இதனால் தேதியை அக்கட்சி மாற்றியுள்ளது.

News July 5, 2025

நடிகர்கள் போதைப்பொருள் விவகாரம்… அதிரடி கைது!

image

போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா கைது செய்யப்பட்டது கோலிவுட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும், பல நடிகர்கள், நடிகைகள் கூட போதைப்பொருள் பயன்படுத்தி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், போதைப்பொருள் விற்பனையாளராக இருந்த பயாஸ் ஷமேட் என்பவரை போலீஸ் கைது செய்திருக்கிறது. அவரிடம் விசாரணை நடத்தினால், மேலும் பல பிரபலங்கள் சிக்க வாய்ப்புள்ளது.

error: Content is protected !!