News April 7, 2025
ஸ்டாலினுக்கு ஏன் இவ்வளவு அக்கறை? – அதிமுக

அதிமுக யாருடன் கூட்டணி வைக்க வேண்டும்?, என்ன கோரிக்கை வைக்க வேண்டும் என்ற அக்கறை ஸ்டாலினுக்கு ஏன் என அக்கட்சித் தலைமை கேள்வி எழுப்பியுள்ளார். நீட் தேர்வை நாட்டிற்கே அறிமுகம் செய்துவிட்டு, அதற்காக உச்சநீதிமன்றம் வரை சென்று வாதாடியது எந்த கூட்டணி என்றும் அதிமுக விமர்சித்துள்ளது. நீட் தேர்வை ரத்து செய்தால்தான் பாஜகவுடன் கூட்டணி என அதிமுகவால் கோரிக்கை வைக்க முடியுமா என ஸ்டாலின் கூறி இருந்தார்.
Similar News
News April 9, 2025
வக்ஃப் மசோதவுக்கு எதிரான மனுக்கள்.. ஏப்., 15ல் விசாரணை

வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 15க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் வரும் 15-ம் தேதி விசாரணை எடுத்துக்கொள்ளப்படுகிறது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்டது. வக்ஃப் மசோதாவுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்த நிலையில் அது சட்டமானது.
News April 9, 2025
REWIND:அந்த கால வாகனங்கள்.. நினைவிருக்கா?

ஒரு காலத்தில் நமது அடையாளமாக இருந்த சில வாகனங்கள் இன்று கண்காட்சிகளில்தான் காண வேண்டும். கிராமப்புறங்களில் முக்கிய போக்குவரத்து சாதனமாக இருந்த மாட்டு வண்டிகள், இப்போது அரிதாகிவிட்டன. நகரங்களில் பயணிக்க மக்கள் பயன்படுத்திய சைக்கிள் ரிக்ஷாக்களும் மறைந்துவிட்டன. அன்றைய சொகுசு கார் ஸ்டாண்டர்ட் 2000 தான். அதோடு அன்றைய எதிர்பார்ப்புகளை மிஞ்சிய கார் என்றால் அது ஸ்டாண்டர்ட் ஹெரால்ட்.
News April 9, 2025
வரலாற்றில் இன்று

* 1860 – முதன்முறையாக மனித குரல் பதிவு செய்யப்பட்டது. * 1870 – அமெரிக்க அடிமைத்தன எதிர்ப்புச் சங்கம் கலைக்கப்பட்டது* 1940 – ஜெர்மனி டென்மார்க் மற்றும் நோர்வே மீது படையெடுத்தது * 1963 – பிரிட்டன் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் முதல் கௌரவ அமெரிக்க குடிமகனாக ஆனார். *2013 – ஈரானில் 6.1 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 32 பேர் உயிரிழந்தனர்.