News September 27, 2025
‘IDIOT’ என்று தேடினால் டிரம்ப் போட்டோ வருவது ஏன்?

கூகுளில் ‘IDIOT’ என்று தேடினால் டிரம்ப்பின் போட்டோ வருவது ஏன் என்பது குறித்து அமெரிக்க நீதித்துறையிடம் சுந்தர் பிச்சை விளக்கம் அளித்துள்ளார். கூகுள் சொந்தமாக கருத்துகளை உருவாக்குவதில்லை எனவும், மக்கள் பதிவேற்றும் கீவேர்டுகள், போட்டோக்களையே கூகுள் வெளிப்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார். அரசியல் சார்பு நிலையுடன் கூகுள் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Similar News
News September 27, 2025
உயரங்களை தொட்ட ப.சுப்பராயன்

1926-ல் அன்றைய அரசியல் சூழ்நிலைகள் காரணமாக நீதிக்கட்சி ஆதரவுடன் மெட்ராஸ் மாகாண முதல்வரானார் <<17848853>>ப.சுப்பராயன்<<>>. அதன்பின் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து மாகாண சட்டம் மற்றும் கல்வி அமைச்சர் (1937-39), உள்துறை & காவல்துறை அமைச்சர் (1947-48), திருச்செங்கோடு எம்பி (1957-62), மத்திய போக்குவரத்து அமைச்சர் (1959-62), மகாராஷ்டிரா மாநில கவர்னர் (1962) பதவிகளை வகித்துள்ளார். இவர் 1962-ல் காலமானார்.
News September 27, 2025
EMI-யில் கார் வாங்க போறீங்களா? இதோ சில டிப்ஸ்!

புதிய கார் வாங்க விரும்பினால், சேமிப்பு முழுவதையும் செலவழிக்காமல், EMI-யில் வாங்குவது சிறந்த முறையாக கருதப்படுகிறது. அதன்படி, EMI-யில் கார் வாங்க விரும்புவோருக்கு சில டிப்ஸ் மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. அதில், உங்களுக்கான கார் எது என்பதை தேர்ந்தெடுங்க. இதன்மூலம் EMI-யால் ஏற்படும் மன அழுத்தத்தை தவிக்கலாம். உங்கள் ஐடியா என்ன? கமெண்ட்ல சொல்லுங்க.
News September 27, 2025
நடிகர் சத்யராஜ் வீட்டில் துயரம்.. நேரில் அஞ்சலி

நடிகர் சத்யராஜின் மனைவி மகேஸ்வரியின் தாயார் விசாலாட்சி சுந்தரம்(92) வயது மூப்பு காரணமாக காலமானார். அவரது உடலுக்கு சத்யராஜ், மகன் சிபிராஜ், மகள் திவ்யா உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். பின்னர், உடுமலை மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது. இதில், கொடுமையான விசயம் என்னவென்றால் சத்யராஜின் மனைவி மகேஸ்வரி கடந்த 4 ஆண்டுகளாக கோமாவில் உள்ளார். அவருக்கு தனது தாய் உயிரிழந்ததே தெரியாது. So Sad!