News November 26, 2024

எதுக்கு மன்னிப்பு கேட்கணும்..CM பேசுனது தப்பு இல்ல: சேகர்பாபு

image

ராமதாஸ் தொடர்பான முதல்வரின் விமர்சனத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை என சேகர்பாபு கூறியுள்ளார். ராமதாஸ் தொடர்பாக எந்த அவதூறான வார்த்தையும் யாரும் பேசவில்லை என்று கூறிய அவர், நடைமுறையில் உள்ள வார்த்தைகளை மட்டுமே முதல்வர் பேசியதாகவும் அவர் விளக்கம் தெரிவித்தார். முன்னதாக, ராமதாஸூக்கு வேறு வேலையே இல்லை என முதல்வர் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News

News August 21, 2025

பெற்றோருக்கு எழுதிய லெட்டர்; அதிகாரியின் Nostalgic Moment

image

பதிவுத் தபால் சேவை செப்.1 முதல் நிறுத்தப்படுகிறது. இந்நிலையில் தனது தபால் அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார் Ex.வான்படை அதிகாரி ஒருவர். 1972-ல் புனேவின் தேசிய டிபென்ஸ் அகாடமியில் இருந்து, தன்னுடைய பெற்றோருக்கு கடிதம் அனுப்ப ’கேடட்ஸ் மெஸ்’ எனும் தபால் பெட்டியை பயன்படுத்தியிருக்கிறார். இதனை நினைவுகூர்ந்த அவர் அப்பெட்டி கடிதங்களின் சின்னமாக இன்றும் நிலைத்து நிற்கிறது எனக் கூறி நெகிழ்ந்துள்ளார்.

News August 21, 2025

தீபாவளிக்கு 20% தள்ளுபடி.. அமைச்சர் அறிவிப்பு

image

தீபாவளி, சத் பண்டிகைகளையொட்டி நாடு முழுவதும் 12,000-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். மேலும், பயணக் கட்டணத்தில் 20% தள்ளுபடி வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதன்படி, அக். 13 முதல் 26-க்குள் புறப்பட்டு, நவ. 17 முதல் டிச.1-க்குள் திரும்பும் பயணிகளுக்கு டிக்கெட் கட்டணத்தில் 20% தள்ளுபடி வழங்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

News August 21, 2025

Tech Talk: டெலிகிராம்ல Free-ஆ மொழிகள் கத்துக்கலாமா?

image

டெலிகிராம் மெசேஜ் அனுப்ப மட்டுமே பயன்படும் சாதாரண செயலி அல்ல. இதில் இருக்கும் Bots அன்றாடம் உங்களுக்கு தேவையான பல சேவைகளை வழங்குகிறது. 1.YSaver – இந்த Bot-ல் உங்களுக்கு தேவைப்படும் யூடியூப் Link-ஐ கொடுத்தால் அது அந்த வீடியோவை டவுன்லோடு செய்து கொடுக்கும். 2.AI IMAGE GENERATOR – இதில் AI புகைப்படங்களை இலவசமாக பெறலாம். 3.Learn Languages AI – இதில் பல மொழிகளை இலவசமாக கற்றுக்கொள்ளலாம். SHARE.

error: Content is protected !!