News October 5, 2025

முதலை கண்ணீர்னு ஏன் சொல்றாங்க? இதோ காரணம்

image

சோகமாக இருப்பதால் முதலைகள் அழுவதில்லை. மாறாக, சாப்பிடும் போதுதான் அவை அழுகின்றன. முதலைகளின் தாடைக்கு மேல் கண்ணீர் சுரப்பிகள் இருக்கின்றன. தனது உணவை அவை மென்று திண்ணும்போது, கண்ணீர் சுரப்பிகள் அழுத்தத்திற்கு உள்ளாகிறதாம். இதனால்தான் அவற்றுக்கு கண்ணீர் வருகிறது. 99% பேருக்கு தெரியாத இந்த தகவலை நீங்க SHARE பண்ணுங்க.

Similar News

News October 5, 2025

ராமதாஸ் ஹாஸ்பிடலில் அனுமதி

image

பாமக நிறுவனர் ராமதாஸ் இதய பரிசோதனை மேற்கொள்ள ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நலம் குறித்த அறிக்கையை ஹாஸ்பிடல் நிர்வாகம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பாமக தொண்டர்களுக்கு மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

News October 5, 2025

பிக்பாஸ் 9 போட்டியாளர்கள் இவர்கள் தான்!

image

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி இன்று தொடங்கியுள்ளது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் விஜய் சேதுபதி, ஒவ்வொரு போட்டியாளராக அறிமுகம் செய்து வருகிறார். அந்த வகையில், வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர், மாடல் அழகி அரோரா சின்க்ளேர், குக் வித் கோமாளி புகழ் கனி, VJ பார்வதி, துஷார், சபரி நாதன் மற்றும் FJ உள்ளிட்டோர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். இன்னும் யாரெல்லாம் இருப்பாங்கன்னு guess பண்ணுங்க..!

News October 5, 2025

திமுகவினருக்கு காவல்துறை ஏவல்துறையா? நயினார் கேள்வி

image

நெல்லையில், கடந்த 2 ஆண்டுகளில் போலீசாரால் கைது செய்யப்பட்ட 217 பேர், கை, கால்களில் காயமுற்று ஹாஸ்பிடல்களில் அனுமதிக்கப்பட்டது அதிர்ச்சியை தருவதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். குற்றங்களை தடுப்பதை விடுத்து, சந்தேகிக்கப்படும் நபர்களை அடிப்பதுதான் திராவிட மாடலா எனவும், திமுகவினருக்கு ஏவல்துறையாகவும், அப்பாவிகளுக்கு அராஜக துறையாகவும் காவல்துறை மாறுவது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

error: Content is protected !!